லோக்சபா தேர்தல்.. தமிழ்நாட்டில் யாருக்கு வெற்றி? ஸ்வீப் செய்த திமுக! அதிமுக, பாஜக ஷாக்! பரபர கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

அதில், தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0

Lok sabha prediction survey: Who will win in Tamil Nadu? Survey by Times Now - Matrize Poll

மேற்கு வங்கம் (மொத்த இடங்கள்: 42): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

திரிணாமூல் காங்கிரஸ் : 26
பாஜக: 15
காங் + இடது: 1
மற்றவை: 0

ஒடிசா (மொத்த இடங்கள்: 21): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

BJD: 9
பாஜக: 11
காங்: 1
மற்றவை: 0

ஜார்கண்ட் (மொத்த இடங்கள்: 14): லோக்சபா தொகுதிப் பங்கீடு கணிப்புகள் இதோ:

NDA: 13
இந்தியா :1
மற்றவை: 0

சத்தீஸ்கர் (மொத்த இடங்கள்: 11): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

பாஜக: 11
காங்: 0
மற்றவை: 0

குஜராத் (மொத்த இடங்கள்: 26): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

பாஜக: 26
காங்: 0
AAP+: 0
மற்றவை: 0

ராஜஸ்தான் (மொத்த இடங்கள்: 25): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:

பாஜக: 25
காங்: 0
மற்றவை: 0

மத்தியப் பிரதேசம் (மொத்த இடங்கள் - 29): லோக்சபா சீட்-கணிப்புகள் இதோ:

பாஜக: 28
காங்: 1
மற்றவை: 0

உத்தரப் பிரதேசம் (மொத்த இடங்கள்: 80): மக்களவைத் தொகுதிப் கணிப்புகள் இதோ:

பாஜக+: 77
இந்தியா: 3
பிஎஸ்பி: 0 ஆகிய இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

மொத்தமாக ரிசல்ட் என்ன: மக்களவையின் ஒட்டுமொத்த கணிப்பு:

மொத்த இடங்கள்: 543

பாஜக கூட்டணி: 366
இந்தியா கூட்டணி: 104
மற்றவை: 73

மீண்டும் பாஜக ஆட்சி: இதன் மூலம் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தோல்வி: அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் படி பாஜக: 1 இடத்தில் மட்டுமே வெல்லும். திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களில் வெல்லும். 39 இடங்களில் இருந்து 3 இடங்களை திமுக இழக்கும் என்றாலும், பெரும்பான்மை இடங்களில் திமுகவே வெல்லும். அதிமுக: 2 இடங்களில் வெல்லும். கடந்த முறை ஒரு தொகுதியில் வென்ற அதிமுக இந்த முறை 2 இடங்களில் வெல்லும்.

நெருங்கும் தேர்தல்: லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் படு பிசியாக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+