மேகதாதுவிற்காக கோஷம்.. லோக்சபா, ராஜ்யசபாவில் அதிமுக, திமுக எம்பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்
சென்னை: லோக்சபாவில் இருந்து, தம்பிதுரை மற்றும் வேணுகோபால் தவிர்த்த அதிமுக எம்பிக்கள் அனைவரும் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப் படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

லோக்சபாவில் அதிமுகவுக்கு மொத்தம் 37 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் தம்பிதுரை மற்றும் வேணுகோபால் ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவருமே 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் ராஜ்யசபாவில் அதிமுக எம்பிக்கள் ஏழு பேரும், கனிமொழி உள்ளிட்ட திமுக எம்பிக்கள் 5 பேரும் இன்று ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு, மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக இன்று பலமுறை அவையை ஒத்தி வைத்தார் ராஜ்யசபா தலைவர்.
லோக்சபாவிலும் அதிமுக எம்பிக்கள், மேகதாது விவகாரத்திற்காக தொடர்ந்து கோஷமிட்டனர். நாடாளுமன்றம் கூடியது முதலே இவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் நடவடிக்கை பாதிக்கப்படுவதால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல முறை எச்சரித்தும் எம்.பி.க்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சஸ்பெண்ட் நடவடிக்கை அரிதானது ஆகும். இதனிடையே, சபாநாயகர் நடவடிக்கை அநீதியானது என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications