வாட்டர்மெலன் திவாகர் வீடியோவை தூக்கக் கலக்கத்தில் தெரியாமல் லைக் செய்துட்டேன்! லோகேஷ் கனகராஜ்
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், வாட்டர்மெலன் திவாகர் தொடர்பான வீடியோவைப் பற்றி விளக்கமளித்துள்ளார். "தூக்கக் கலக்கத்தில் தெரியாமல் ஒரு முறை வாட்டர்மெலன் திவாகரின் வீடியோவை லைக் செய்துவிட்டேன். அதன்பிறகு பலரும் என்னைத் தொடர்புகொண்டு, ஏன் நீங்கள் அந்த வீடியோவை லைக் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதனால் உடனடியாக அதை அன்லைக் செய்துவிட்டேன்," என்று அவர் தெரிவித்தார்.

யார் இந்த வாட்டர்மெலன் திவாகர்?
பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் திவாகர் என்பவர், சமூக வலைத்தளங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் அண்மைக் காலமாக மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு நபர். தன்னை "நடிப்பு அரக்கன்" என்று கூறிக்கொள்ளும் இவர், 'கர்ணன்' திரைப்படத்தில் சிவாஜியின் இறப்பு காட்சியைப் போல நடித்து முதலில் மக்களின் கவனத்தைப் பெற்றார். இவருடைய வீடியோக்கள் பெரும்பாலும் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. இவரைத் திட்டாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
கஜினி சூர்யா
குறிப்பாக, 'கஜினி' திரைப்படத்தில் நடிகர் சூர்யா தர்பூசணி சாப்பிட்டபடி ஸ்டைலாகக் கையை நீட்டும் காட்சி மிகவும் பிரபலமானது. அதே காட்சியை திவாகரும் வாட்டர்மெலன் சாப்பிட்டபடி ரீ-கிரியேட் செய்திருந்தார். இதற்குப் பலரும் இவரை கடுமையாக விமர்சித்தனர். நடிகர் சூர்யாவின் 'கருப்பு' படத்திலும் வாட்டர்மெலன் காட்சி இடம்பெற்றதாகவும், தனது வாட்டர்மெலன் காட்சி பிரபலமானதாலும், கஜினி காட்சியை ரீ-கிரியேட் செய்ததாலும்தான் 'கருப்பு' படத்தில் மீண்டும் அந்தக் காட்சி வைக்கப்பட்டதாகவும் திவாகர் தனது யூடியூப் வீடியோக்களில் கூறி வந்தார்.
ஆங்கருடன் ஏற்பட்ட சர்ச்சை
சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு திவாகர் பேட்டியளிக்கச் சென்றிருந்தார். "நான் ஏற்கெனவே வாட்டர்மெலன் ஸ்டார் ஆகிவிட்டேன்; மக்கள் மத்தியில் எனக்குச் செல்வாக்கு இருக்கிறது," என்று அவர் தெரிவித்தபோது, ஆங்கர் ஒருவர் குறுக்கிட்டு, "சிலர் தங்களது நிஜ வாழ்க்கையில் வாழ முடியாததை நினைத்து கனவுலகில் வாழ்வார்கள். அதுபோல நீங்களும் கனவிலும் மிதக்கிறீர்களா?" என்று கேட்டார்.
ஆங்கரிடம் கோபம்
இந்தக் கேள்வியால் கோபமடைந்த திவாகர் அங்கிருந்து உடனடியாக எழுந்துவிட்டார். ஆங்கர் சமாதானப்படுத்த முயன்றும் அவர் கேட்கவில்லை. "என்னை அவமதிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று தானே பேட்டிக்கு ஒப்புக்கொண்டேன், பிறகு எப்படி இது போன்ற கேள்விகளைக் கேட்கிறீர்கள்?" என்று சத்தமிட்டார். அதற்கு ஆங்கர், "சரி, போவதுதான் போகிறீர்கள், மைக்கை கழற்றி கொடுத்துவிட்டு போங்கள்" என்று கூறியதும் திவாகர் மேலும் கோபமடைந்தார்.
வாட்டர்மெலன் திவாகர் காவல்துறையில் புகார்
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, திவாகர் அந்த யூடியூப் குழுமத்தைக் குற்றம்சாட்டி ஒரு வீடியோவை வெளியிட்டார். பின்னர் தனக்கு நேர்ந்தது குறித்து கைப்பட ஒரு புகார் கடிதத்தை எழுதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவல்துறைக்கு டேக் செய்து பதிவேற்றம் செய்தார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியது. பெரும்பாலான நெட்டிசன்கள் ஆங்கர் பக்கமே ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.


Click it and Unblock the Notifications
