மாநகரம் முதல் லியோ வரை.. லோகேஷ் கனகராஜ் செய்த மேஜிக்.. இதெல்லாம் கவனிச்சிருக்கீங்களா.. செம்ம?
சென்னை: லோகேஷ் கனகராஜ் தனது ஒவ்வொரு படத்திலும் பழைய பாடல்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். முதல் முதலாக இயக்கிய மாநகரம், அடுத்து இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ வரை லோகேஷ் கனராஜ் பயன்படுத்திய பாடல்கள் தற்போது ரசிகர்களால் வைப் செய்யப்படுகின்றன. அவற்றை இப்போது பார்ப்போம்.
தமிழ் சினிமா ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான புதுமையானவிஷயங்களை சந்தித்துவந்துள்ளது. எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி, அடுத்து வந்த ரஜினி கமல் காலமாக்கட்டும் சரி, இப்போது உள்ள விஜய் அஜித் காலமாகட்டும் தமிழ் சினிமா பல்வேறு வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்தது.

இயக்குனர்களை பொறுத்த வரை அன்றைய காலக்கட்டத்தில் இருந்த கே பாலசந்தர், எஸ்பி முத்துராமன், மகேந்திரன் போன்றோர்கள் தங்கள் படங்களை ஒரே பாணியில் இயக்கினார்கள். இதேபோல் அடுத்து வந்த ஷங்கர், கேஎஸ் ரவிகுமார் உள்பட பல்வேறு இயக்குனர் அவர்களுக்கு என்று பாணியில் படத்தை இயக்கினார்கள். இது ஷங்கர் படம் என்று பார்த்த உடன் சொல்லிவிடலாம். இதேபோல் கேஎஸ் ரவிகுமார் படம் என்றும் பார்த்த உடன் கண்டுபிடித்துவிடலாம்..
அப்படித்தான் இப்போது லோகேஷ் கனராஜ், நெல்சன், அட்லி, வெற்றிமாறன், வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் என இன்று உள்ள பிரபல இயக்குனர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை சினிமாவிலும், திரைப்பட பாணியையும் உருவாக்கி உள்ளனர்.
இதில் லோகேஷ் கனகராஜ் பற்றித்தான் நாம் பார்க்க போகிறோம். லோகேஷ் கனகராஜ் இயக்கி படங்கள் எல்லாம் யுனிவர்சல் கோடு போல், ஒவ்வொரு படத்திலும் இருக்கும். திரைக்கதை அமைப்பே மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவரது முதல் படமான மாநகரம், அடுத்து இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் இப்போது இயக்கி வெளிவந்துள்ள லியோ வரை ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான விஷயங்களை உருவாக்கி உள்ளார். அவர் தனது படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவார்.. வைபுக்காக, அல்லது சண்டைக்காக ஏதாவது ஒரு காரணத்திற்கு பழைய பாடல்களை பயன்படுத்துவார்.
Loki's Retro Playlist ✨
— பாக்டீரியா (@Bacteria_Offl) October 20, 2023
In Leo ~
1. Karu karu karupayi (Eazhaiyin Sirippil)
2. Thaamara Poovukkum Thannikkum (Pasumpon) pic.twitter.com/QspvQfkG0j
அப்படி பயன்படுத்தி பாடல்களின் வரிசையை ட்விட்டரில் ரசிகர்கள் வரிசை படுத்தி உள்ளனர். அவற்றை பார்ப்போம். முதலில் லியோவிலேயே பார்ப்போம். லியோவில் கரு கரு கருப்பாயி பாடலை பயன்படுத்தி இருப்பார். இந்த பாடல் ஏழையின் சிரிப்பில் என்ற படத்தில் இடம் பெற்றிருக்கும். இதேபோல் தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்தது இல்லை என்ற பாடலை பயன்படுத்தி இருப்பார்.. இந்த பாடல் பசும்பொன் படத்தில் இடம் பெற்றிருக்கும். இதேபோல் நான் பொல்லாதவன் பாடலும் இடம் பெற்றிருக்கும்.
விக்ரம் படத்தில் சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற இடம் பெற்றிருக்கும். இது 1995ல் வெளிவந்த அசுரன் படத்தில் இடம் பெற்றிருந்தது. இதேபோல் கல்வியா செல்வமா வீரமா பாடல் இடம் பெற்றிருக்கும் இது சரஸ்வதி சபதம் படத்தில் இடம் பெற்றிருந்தது.
இதேபோல் மாஸ்டர் படத்தில் வெத்தல போட்ட சோக்குல பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் அமரன் படத்தில் இடம் பெற்றிருந்தது. இதேபோல் கருத்த மச்சான் பாடலும் மாஸ்டர் படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் புது நெல்லு புது நாத்து படத்தில் இடம் பெற்றிருக்கும்.
கைதி படத்தை பொறுத்தவரை நான்கு பாடல்களை பயன்படுத்தி இருப்பார். என் சுவாச காற்றே படத்தில் வரும் ஜும்பலக்கா பாடலும், மறுபடியும் படத்தில் வரும் ஆசை அதிகம் வச்சி பாடலும், இந்து படத்தில் வரும் மெட்ரோ சேனல் முன்னபாரு பாடலும், மீரா படத்தில் வரும் புது ரோட்டுல தான் பாடலும் இடம் பெற்றிருக்கும்.
மாநகரம் படத்தை பொறுத்தவரை லோகேஷ் கனராஜின் முதல் படம் ஆகும். இதில் மூன்று முகம் படத்தில் வரும் தேவஅமிருதம் ஜீவஅமிருதம் பாடலும், நவராத்திரி படத்தில் வரும் இரவினில் ஆட்டம் பாடலும் இடம் பெற்றிருக்கும்.. லேகேஷ் கனராஜ் 90ஸ் கிட்ஸ் என்பதால் இதுபோல் பழைய பாடல்களை தனது படத்தில் வைப்பதாக ரசிகர்கள் இன்றும் சொல்லிவருகிறார்கள். படத்தின் திரைகதை பாணியிலும், பழைய பாடல்களை பயன்படுத்தும் முறையிலும் சரி, லோகேஷ் இன்றைய ரசிகர்களால் அதிகமாக பாராட்டப்படுகிறார்..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications