அதிமுக கொடுத்த உயரத்தை உங்க அப்பாவிடம் கேளுங்க.. தவெகவில் இணைந்த லோகேஷ் தமிழ்செல்வனுக்கு பதிலடி
கோவை: சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் கடந்த முறை கூட்டணி வகித்த தேமுதிக உள்ளிட்டோரை கூட அவர்களால் தக்க வைக்க முடியவில்லை. மறுபக்கம் அதிமுகவின் சீனியர் நிர்வாகிகளும் கட்சி மாறி வருகிறார்கள். அதிமுக முன்னாள் சபாநாயகரும், கொங்கு பகுதியின் சீனியர் நிர்வாகியுமான தனபாலின் மகனும் லோகேஷ் தமிழ்செல்வன் தவெகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கொங்கு அதிமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனபால். அதிமுகவில் சாதாரண தொண்டராக எளிய பின்னணி கொண்ட அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் கட்சிக்குள்ளேயே ஒடுக்குமுறைகளை சந்தித்தார். இதையறிந்த ஜெயலலிதா அவருக்கு அடுத்தடுத்து பதவிகளை கொடுத்தார். சங்ககிரி மற்றும் அவிநாசி தொகுதிகளில் தலா 2 முறை, ராசிபுரம் தொகுதியில் ஒருமுறை எம்எல்ஏவாக இருந்தார்.

தனபால் - லோகேஷ் தமிழ்செல்வன்
அதிமுக ஆட்சியில் சபாநாயகராகவும் இருந்தார். இவரின் கதையை தழுவி தான் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் எடுக்கப்பட்டது. தனபால் இப்போதும் அவிநாசி தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இவருக்கு லோகேஷ் தமிழ்ச்செல்வன் என்கிற மகன் உள்ளார். எம்பிஏ பட்டதாரியான அவர் அதிமுகவிலும் ஆக்டிவாக இருந்தார்.
அதிமுகவின் அவிநாசி தொகுதியின் ஐடி விங் பொறுப்பாளராகவும், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் போது நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். திமுக ஆ. ராசா மற்றும் பாஜகவின் எல். முருகன் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டிருந்தார்.
தவெகவில் இணைப்பு
2026 தேர்தலுக்காக அதிமுகவில் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டுள்ளன. தனபாலுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவிநாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக லோகேஷ் கட்சி தலைமையிடம் கடந்த மாதம் விருப்ப மனு அளித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அதிமுகவில் பயங்கர ஆக்டிவாக இருந்த லோகேஷ் நேற்று விஜய் முன்னிலையில் தவெக வில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் தமிழ்செல்வன், "அதிமுகவில் தற்போது என் தந்தைக்கு மதிப்பு கொடுப்பதில்லை. குறிப்பிட்ட சிலர் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். என் தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கூட யாரும் வந்து பார்க்கவில்லை. நீலகிரி தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்துவிட்டு முதுகில் குத்தினார்கள்" என்று கூறினார்.
கொங்கு அதிமுக பதிலடி
இது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி தொகுதியில் இந்த முறை தனபால் மற்றும் லோகேஷ் ஆகிய இருவருக்கும் சீட் இல்லை என அதிமுக முடிவெடுத்துள்ளது. அதற்கு பதிலாக ராசிபுரம் தொகுதியில் லோகேஷுக்கு சீட் ஒதுக்குவதாக முடிவு செய்த்தால் லோகேஷ் அப்செட்டாகியுள்ளார். இதையறிந்த தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவரை தவெகவில் இணைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கொங்கு அதிமுகவினர் கூறுகையில், "லோகேஷ் தமிழ்செல்வனுக்கு அதிமுக எம்பி சீட் கொடுத்துள்ளது. மாநில அளவில் கட்சி பொறுப்பு கொடுத்துள்ளது. கட்சிக்காக நீங்கள் செய்த பணி என்ன. ஒரு 10 நிமிட பத்திரிகையாளர் சந்திப்பில் சரியாக பேச தெரியவில்லை. கட்சி மேடையில் முதல் வரிசையில் அமர வைத்தனர். இதே இடம் கிடைப்பதற்காக கட்சியில் 10 - 15 வருடங்கள் உழைத்தவர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர்.
அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
அதிமுகவில் இவர்கள் குடும்பம் பெற்ற வளர்ச்சி இன்னொரு கட்சியில் யோசித்து கூட பார்க்க முடியாது. தனபாலை எங்கள் அம்மா எவ்வளவு பெரிய உயரத்தில் அமர வைத்து அழகு பார்த்தார். லோகேஷ் நீலகிரி வேட்பாளராக நின்றபோது கூட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. இதை தனபால் அறிவார். கட்சி கொடுத்த உயரத்தை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை மீறி லோகேஷ் தவறான முடிவு எடுத்துள்ளார்.
நம்பிக்கையையும், விசுவாசத்தையும் உடைத்து அரசியலில் திசை மாறியவர்கள் வெற்றி பெற முடியாது. இதற்கு அவர்கள் மக்கள் முன்பு பதில் சொல்லியே ஆக வேண்டும். அதிமுக என்கிற கட்சி தான் தனபாலையும், லோகேஷையும் வளர்த்தது. இதே அவிநாசி தொகுதியில் அவர்கள் தவெக சார்பில் போட்டியிட்டாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று சவால் விடுகிறோம்" என்றனர்.
-
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
அதிமுகவிலிருந்து வந்த 32 பேருக்கு.. சீட்டு கொடுத்த விஜய்.. இரட்டை இலையை காலி செய்யும் தவெக? -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications