விஜய் சொன்னா சொன்ன நேரத்துக்கு உங்களால் வர முடியாதா? அறிவு இருக்கா? லொள்ளு சபா ஈஸ்டர் ஆக்ரோஷம்
சென்னை: கரூர் தவெக பிரச்சார கூட்டத்திற்கு சொன்னா சொன்ன நேரத்துக்கு உங்களால வர முடியாதா? அசிங்கமா இருக்கு என லொள்ளு சபா ஈஸ்டர் கடும் கண்டன வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் லொள்ளு சபா ஈஸ்டர் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: வணக்கம், கரூர் சம்பவம் தொடர்பாக ஒரு மூன்று கேள்விதான். ஏங்க (விஜய்) சொன்னா சொன்ன நேரத்துக்கு உங்களால வரமுடியாதா? ஒரு மணி நேரம்,2 மணி நேரம் தாமதமாக வந்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் எத்தனை மணி நேரம் தாமதம்?

சரி லேட்டாகவே நீங்கள் அங்க போய் பேசினீங்க. அங்கு ஒரு பிரச்சினை நடந்தது, உடனே அந்த இடத்தை விட்டு வந்தீங்க. நீங்கள் போகும் போது இத்தனை பேர் இறந்தாங்க என செய்தி வந்திருக்குமே! நீங்கள் ஏன் அந்த ஊரிலேயே தங்கவில்லை?
கேட்டால் ஹோட்டலில் ரூம் கொடுக்க மாட்டேங்கிறாங்க பயப்படுறாங்கன்னு சொல்வீங்க! ஏன் உங்கள் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் போய் தங்குவதுதானே! 5 ஸ்டார் ஹோட்டலில்தான் தங்குவீங்களா?
சரி கிளம்பி சென்னை போனதுதான் போனீங்க! அந்த பகுதியைச் சேர்ந்த 10 தவெக நிர்வாகிகளை அழைத்து, கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ங்க, அவர்களுக்காகும் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்" என கூறி மருத்துவமனைக்கு அவர்களை நிற்க சொல்லியிருக்கலாமே!
கமிஷனர், ஐஜி, இல்லாட்டி அமைச்சர் கிட்ட கூட நீங்கள் பேசியிருக்கலாமே! முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்வோம். பிறகு யார் மீது தவறு என்பதை பார்க்கலாம் என உங்களால் சொல்ல முடியாதா?
உங்களுக்கு அறிவு இல்லையா? குழந்தைங்க செத்துயிருக்காங்க. இதைவிட எனக்கு எரிச்சலூட்டும் விஷயம் என்னவென்றால் சம்பவத்திற்கு ஆளும் கட்சி காரணம், காவல் துறைதான் காரணம் என ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் சொல்லும் அந்த 10 பேருக்கு மனசாட்சியே இல்லையா? நீங்கள் எல்லாம் மனிதர்கள்தானா?
முதலில் நடந்த துயரத்தை எப்படி சரி செய்வது என்பதற்கான வழியை பார்க்காமல் சிபிஐக்கு மாற்றணும்னு கேக்குறீங்க. நீங்கள் கேட்டது போல் சிபிஐக்கு மாற்றுங்கள், இதில் யாரெல்லாம் என்னென்ன செய்தார்களோ அவர்கள் ஒவ்வொருத்தரையும் தோலை உரித்து தொங்கவிடணும்! கட்சியை வளருங்கள், ஆனால் இது போல் அசிங்கம் செய்யாதீர்கள். இவ்வாறு ஈஸ்தர் கடும் கோபத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் முக்கிய காரணமாக விஜய் சொன்ன நேரத்திற்கு வராதது என சொல்லப்படுகிறது. கரூர் மட்டும் இல்லை திருச்சி, அரியலூர், நாகை, தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் அவர் சொன்ன நேரத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கள் கூடும் இடங்களில் விஜய் தனது முகத்தை காட்டி கையை அசைத்திருந்தால் அங்கிருந்த கூட்டங்கள் எல்லாம் கலைந்திருக்கும். ஆனால் விஜய்யோ அப்படி செய்யாமல் அந்த கூட்டத்தை அப்படியே கூடவே அழைத்து வந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications