புது உருட்டா இருக்கு.. கோழி சாப்பிட்டா முட்டை போடுவோமா.. தமிழா தமிழா நிகழ்ச்சியில் லொல்லு சபா ஜீவா!
சென்னை : சேவல் சாப்பிட்டால் கூவுவோம், ஆடு,மாடு சாப்பிட்டால் முட்டுவோம், பாம்பு சாப்பிட்டால் கொத்துவோம்... என்பது போல் லொல்லு சபா ஜீவா தமிழா தமிழா நிகழ்ச்சியில் பேசிய பேச்சு சர்ச்சையாக மாறி உள்ளது.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த வார நிகழ்ச்சில் சிறப்பு விருந்தினராக நடிகர் லொல்லு சபா ஜீவா கலந்து கொண்டார்.

இவர் நிகழ்ச்சியில் லொல்லு சபா ஜீவா பேசும் போது, நான் வெஜ் எவ்வளவுக்கு எவ்வளவு நாம் சாப்பிடுகிறோமோ, எந்த மிருகத்தை சாப்பிடுகிறோமோ, குறிப்பாக கோழியோ, ஆடோ, மாடோ எது நம்ம சாப்பிடுறோமோ, அந்த உயிரினம் போல் நாமும் நடந்து கொள்வோம். அந்த விலங்குகளின் தன்மை நமக்குள் வரும் என்று கூறினார்.
இப்படியாக அசைவம் குறித்து நடிகர் லொல்லு சபா ஜீவா பேசியதை கேட்டு தமிழா தமிழா நிகழ்ச்சியில கைதட்டினார்கள். இப்படியாக அந்த சிறு வீடியோ முடிகிறது.இந்த வீடியோவை பார்த்த பலர், லொல்லு சபா ஜீவாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அசைவம் சாப்பிடும் பலரும் ஜீவாவை பேச்சை கிண்டல் செய்யும் அதேநேரம் கடுயைமாக கண்டித்தும் வருகிறார்கள்.

இது என்னடா புது உருட்டா இருக்கு.. நாளைக்கே கோழிய சாப்பிட்டு முட்டை போடுவோமா என்று கேட்கிறார்கள், ஆடு , மாடு சாப்பிட்டா கொஞ்ச நாள்லயே பியூர் வெஜிடேரியன் ஆயிடுவோமா என்று ஜீவாவை கேள்விகளால் துளைத்து வருகிறார்கள். சேவல் சாப்பிட்டால் கூவுவோமா, ஆடு,மாடு சாப்பிட்டால் முட்டுவோமா, பாம்பு சாப்பிட்டால் கொத்துவோமா என்றும் கேள்விகளை பலர் எழுப்பி வருகிறார்கள். தக்காளி சாப்பிடட் சிகப்பா ஆகிடுவோமா...முறுங்கக்கா காப்பிட்டா, நல்லா முறுக்கி கிட்டு இருப்போமா என்றும் கேட்கிறார்கள் சிலர்.
சேவல் சாப்பிட்டால் கூவிவோம்,
— Iyan Karthikeyan (@Iyankarthikeyan) September 20, 2023
ஆடு,மாடு சாப்பிட்டால் முட்டுவோம்,
பாம்பு சாப்பிட்டால் கொத்துவோம்...
இத நீங்க மறுக்கவே முடியாது 😉 pic.twitter.com/Y1MEmb5vyP
சைவம் சாப்பிடுபவர்கள் , அசைவம் சாப்பிடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் உணவு என்பது அவர்கள் உரிமை. உணவு என்பது அடிப்படை உரிமை என்கிற போது, அதன் மேல் தவறான புரிதலை பரப்ப வேண்டாம் என்று நெட்சன்கள் லொல்லு சபா ஜீவாவிடம் வலியுறுத்த உள்ளனர். அதேநேரம் இதையெல்லாம் சிரித்துக் கொண்டே நடத்தும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவடையப்பனை பாராட்ட வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications