லொள்ளு சபா மனோகர் வீட்டில் விஷேசம்.. மறக்காமல் போன நடிகர் கிங் காங்! கூப்பிட்டும் போகாத சந்தானம்!
சென்னை: சமீபத்தில் மிக எளிமையாக நடைபெற்றிருக்கிறது பிரபல காமெடி நடிகரான லொள்ளு சபா மனோகர் இல்ல திருமண நிகழ்வு. பெரிய அளவில் நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமல் குடும்பத்தினர் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அழைப்பு விடுத்தும் நடிகர் சந்தானம் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களுக்கு தற்போது பஞ்சம் என்றுதான் சொல்ல வேண்டும். கவுண்டமணி செந்தில், வடிவேலு, சந்தானம், சூரி போன்றவர்கள் காமெடியில் கலக்கி வந்த நிலையில் தற்போது செந்தில் கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிட்டார்கள்.
சந்தானமும் சூரியும் ஹீரோவாகிவிட்டனர். அதனால் துணை நடிகர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது. அப்படி ஒரு காலத்தில் அனைத்து திரைப்படங்களிலும் காமெடி நடிகர்களுடன் கைகோர்த்து கலக்கியவர் லொள்ளுசபா மனோகர்.

லொள்ளு சபா மனோகர்
விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதற்குப் பிறகு சந்தானத்தின் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சந்தானம் காமெடியனாக நடித்தாலும், ஹீரோவாக நடித்தாலும் ஒரு சில காட்சிகளிலாவது லொள்ளு சபா மனோகர் இல்லாமல் இருக்க மாட்டார். அந்த அளவுக்கு பல ஆண்டுகளாகவே இருவரும் மிகவும் நெருக்கம். இந்த நிலையில் தான் சமீபத்தில் லொள்ளு சபா மனோகரின் மகள் சித்ராவின் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
மகள் திருணம்
மிக எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான நடிகர்களுக்கு மட்டுமே லொள்ளு சபா மனோகர் அழைப்பு விடுத்திருந்தார். குறிப்பாக தனது நீண்ட கால நண்பரான சந்தானத்துக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த லொள்ளு சபா மனோகர் கண்டிப்பாக அவரை திருமணத்திற்கு வர வேண்டும் என அழைத்திருந்தாராம்.
நடிகர் சந்தானம்
ஆனால் கடைசிவரை அந்த திருமண நிகழ்வில் சந்தானம் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் காமெடி நடிகர் கிங்காங் அந்த திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது அந்தப் புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் டிவி
விஜய் டிவி வெள்ளித்திரைக்கு அனுப்பிய நடிகர்களில் ஒருவர் லொள்ளு சபா மனோகர். திரைப்படங்களை ஸ்பூஃப் செய்யும் விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதால் லொள்ளு சபா மனோகர் என்றே அவர் அழைக்கப்படுகிறார். அவருடன் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட பலர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சந்தானத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானாலும் தற்போது வரை பல படங்களில் காமெடியனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
வறுமை நிலை
தோரணை, அலெக்ஸ் பாண்டியன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் கூட ஈமெயில், இஎம்ஐ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உடல் மொழி மூலமே சிரிக்க வைக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. அந்த வகையில் தனது தனித்த உடல் மொழியால் பிரபலமானாலும் போதிய வாய்ப்புகள் இன்றி தற்போது வரை வறுமையான நிலையில்தான் லொள்ளு சபா மனோகர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications