நண்பர் ஸ்டாலின்.. நீண்ட ஆரேக்கியம்..மன நிம்மதியுடன் மக்கள் சேவை செய்ய வேண்டும்.. ரஜினி வாழ்த்து
என் இனிய நண்பர் மு.க ஸ்டாலின் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் நாளைய தினம் 70வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். என் இனிய நண்பர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். முதல்வருக்கு வாழ்த்து கூற திமுக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் இருக்கும் நலம் விரும்பிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும். 07127191333 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம். இந்த தொலைபேசி எண் இன்று முதல் 2ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
மெய்நிகர் சேவையை பயன்படுத்தி முதல்வருடன் புகைப்படம் எடுத்து தங்கள் வாழ்த்தையும் பதிவு செய்யலாம். www.selfiewithcm.com என்ற இணைய தளத்துடன் கியூ.ஆர்.குறியீடு இணைக்கப்பட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்பி எடுத்து கொள்ளலாம். அந்த புகைப்படங்களை தங்களது சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்து முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். முதல்முறையாக நவீன தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
#Thalaivar #Rajinikanth wishes Tamil Nadu CM @mkstalin on his birthday day a ahead.🎉❤️😎 pic.twitter.com/WrC5mPQ9CK
— வானவராயன் (@Itsme0911) February 28, 2023
நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் வணக்கம் என் இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவரது 70வது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ரஜினி பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டிருந்தார். அதே போல முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில் வாழ்த்து கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், தனக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் அரசியலைத் தாண்டி நட்பு இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார். அவரது புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து வாழ்த்தினார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இனிய நண்பர் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications