டைம் முடியப்போகுது.. 2023ம் ஆண்டின் குளிர் நிலவு மாலையுடன் மறையப்போகுது! ஓடிபோய் வானத்தை பாருங்க
சென்னை: இந்த ஆண்டின் மிக நீளமான கடைசி குளிர் நிலவு நேற்று தொடங்கி இன்று மாலை வரை தென்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குளிர் நிலவு என்றால் என்ன? விரிவாக பார்ப்போம்.
2023 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வருடத்தின் கடைசி முழு குளிர் நிலவு நேற்று தென்பட்டு இருக்கிறது. டிசம்பர் மாதத்தின் குளிர்ச்சியான சூழலை விவரிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குளிர் நிலவு (COLD MOON) என்ற வார்த்தை பதம் பயன்படுத்தப்படுகிறது. 99.5 சதவீதம் அளவுக்கு நிலவு தெரியும் ஒரு வானியல் நிகழ்வை குளிர் நிலவு என்று அழைக்கிறார்கள்.

'லாங் நைட் மூன்' என்றும் குளிர் நிலவு அழைக்கப்படுகிறது. நீளமான டிசம்பர் மாத இரவுகளை இப்படி குறிக்கிறார்கள். இந்த டிசம்பர் மாதத்தின் பெரும் பகுதி இரவாகவே இருக்கிறது. அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணிநேரம் இரவு உள்ளது. நேற்று மாலை தொடங்கிய குளிர் நிலவின் உச்ச நிகழ்வு டிசம்பர் 27 ஆம் தேதியான இன்று, காலை 6.03 மணியளவில் நிகழ்ந்தது. காண்போரை மயக்கும் அளவுக்கு அழகிய காட்சியாக அது அமைந்தது.
இந்த குளிர் நிலவின் சிறந்த காட்சியை கிழக்குப் பகுதியில் தெளிவாக காண முடிந்தது. இதனை இன்று மாலை வரை வெறும் கண்களால் காண முடியும். இரவு முழுவதும் குளிர் நிலவு ஒரு அற்புதமான காட்சியைக் தந்தாலும், இதனை பார்ப்பதற்கு சிறந்த நேரம் அதிகாலைதான். 2023 ஆம் ஆண்டின் மற்ற முழு நிலவுகளுடன் ஒப்பிடுகையில் இந்த இறுதி குளிர் நிலவு வானத்தில் உயரமாக காட்சி தருவதுடன் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் எளிதிலும் பார்க்கும் வகையில் உள்ளது.
டிசம்பர் குளிருடன் ஒத்துப்போகும் பெயர் கொண்ட இந்த குளிர் நிலவு மிக நீண்ட நேரம் காட்சி தந்து, உடல்மேனியில் நிலவும் குளிரை மனதிற்கு உள்ளேயும் கொண்டு செல்கிறது. சாதாரண பார்வையாளர்களை கடந்து வானியல் ஆர்வலகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் ஒன்றாக இது உள்ளது. இந்த குளிர் நிலவுடன் வானில் பிரகாசிக்கும் நட்சத்திர கூட்டங்களையும் கண்டு ரசிக்கலாம். குளிர் நிலவின் பளிச்சென்ற ஒளிரும் தன்மையால் ஓரியானில் உள்ள முக்கிய நட்சத்திரமான பெடல்கீஸ் மற்றும் ஆரிகாவில் உள்ள கபெல்லா நட்சத்திரம் நம் கண்களுக்கு எளிதில் தென்படும்.
காலண்டர், கடிகாரம் இல்லாமல் சூரியன், நிலவு, இரவு, பகலை வைத்து நேரம், நாட்கள், மாதங்கள் கணிக்கப்பட்ட பழங்காலத்திலேயே மாதங்கள் மற்றும் பருவங்களின் மாற்றத்தை கண்காணிப்பதில் குளிர் நிலவு முக்கியமாக ஒன்றாக இருந்து உள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் ஏகப்பட்ட பேரழிவுகளை கொடுத்துவிட்டு விடைபெறும் 2023 ஆம் ஆண்டு, இந்த குளிர் நிலவை மக்களின் கண்களுக்கு பரிசாக விட்டுச் செல்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications