அட போங்கப்பா.. எத்தனையாவது முறை ரெய்டுனு மறந்தே போய்விட்டேன்.. கார்த்தி சிதம்பரம் நக்கல்
சென்னை: சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சிபிஐ சோதனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்திற்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றர்.
சென்னை, டெல்லி, மும்பை, சிவகங்கை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்குச் சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

கார்த்தி சிதம்பரம்
அதேநேரம் எந்த வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 2010-14க்கு இடையில் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பியதாக கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வழக்குப்பதிவு
முன்னதாக, சிபிஐ நடத்திய முதற்கட்ட விசாரணை முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி சிபிஐ இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தான் சிபிஐ இப்போது ரெய்டு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் குறிப்பாக எந்த வழக்கு தொடர்பாக ரெய்டு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கார்த்தி சிதம்பரம் ட்வீட்
இதனிடையே சிபிஐ சோதனையை நக்கலடிக்கும் வகையில் கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். சிபிஐ தனது இருப்பிடங்களில் எத்தனையாவது முறையாகச் சோதனை நடத்துகிறது என்பதையே மறந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டரில், "எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நான் மறந்தே விட்டேன். இது (சோதனை) கண்டிப்பாக புதிய சாதனையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிரடி ரெய்டு
டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையிலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடு, அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை தொடங்கிய சோதனை சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications