Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பான் கார்டு தொலைஞ்சு போச்சா? ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? அவசரத்துக்கு e-PAN டவுன்லோட் செய்யலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு வழங்கும் அடையாள அட்டைகளில் மிகவும் முக்கியமானது பான் கார்டு. வெறும் அடையாள அட்டை என மட்டுமல்லாது வங்கி சேவைகள், வருமான வரி, வங்கிக் கடன் உள்ளிட்டவற்றுக்கு மிக முக்கியம். இந்த நிலையில் அசாதாரண சூழல்களில் பான் கார்டு தொலைந்து விட்டால் அதனை எப்படி மீண்டும் திரும்பப் பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்..

இந்தியாவில் நிதி மற்றும் வரி தொடர்பான அனைத்து முக்கிய நடவடிக்கைகளிலும் பான் கார்டு (PAN Card - Permanent Account Number Card) முக்கிய பங்காற்றுகிறது. இந்திய வருமானவரி துறையால் வழங்கப்படும் இந்த அட்டை, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்படும் 10 இலக்க எண் ஒன்றைக் கொண்டிருக்கும்.

பான் கார்டு பெரும்பாலான நிதி நடவடிக்கைகளில் அவசியமாக தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, வங்கிகளில் புதிய கணக்கு தொடங்கும்போது, வருமானவரி தாக்கல் மற்றும் செலுத்தும் போது, பங்குகள் வாங்குவது, விற்குவது, கடன் பெறும் போதும், பெரிய தொகை பணத்தை பரிமாறும் போது பான் கார்டு அவசியம் தேவை.

Lost Your PAN Card

பான் கார்டு

பான் கார்டு இல்லாமல், இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதால் இது ஒரு முக்கிய அடையாள ஆவணம் ஆகும். நிதி நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், பல அரசு திட்டங்களில் நன்மைகள் பெறவும் பான் கார்டு தேவையாகிறது. வங்கி கடன்கள், சேமிப்புத் திட்டங்கள், அரசின் நலத் திட்ட உதவிகள் போன்றவற்றை பெறவும் இது முக்கியமான ஆவணமாகும். பான் கார்டில் நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், தந்தையின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

பான் கார்டு தொலைந்து விட்டதா?

இந்த தகவல்கள் மூலம் உங்கள் அடையாளம் அரசு அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. ஒருவேளை பான் கார்டு தொலைந்து விட்டால், அதை உடனடியாக மீண்டும் பெறுவது மிகவும் அவசியம். இதற்காக வருமான வரித்துறை தனி இணையதளத்தை இயக்கி வருகிறது. ஆன்லைனில் சில எளிய வழிகளைப் பின்பற்றி புதிய பான் கார்டை பெற்றுக்கொள்ளலாம்.

NSDL மூலம் புதிய PAN கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

1: https://onlineservices.nsdl.com/paam/ReprintPAN.html என்ற இணையதளத்திற்கு செல்லவும்

2: Application Type தேர்வு செய்யவும் - "Reprint of PAN card (No change in PAN data)" என்பதைத் தேர்வு செய்யவும்.

3: உங்கள் விவரங்களை உள்ளிடவும்

PAN எண்

ஆதார் எண் (Aadhaar Number - கட்டாயம்)

பிறந்த தேதி (Date of Birth)

Captcha குறியீடு

அனைத்தையும் உள்ளிட்ட பிறகு "Submit" அழுத்தவும்.

4: OTP சரிபார்ப்பு - உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளிட்டு Verify செய்யவும்.

5: கட்டணம் செலுத்தவும், இந்தியாவில் இருப்பவர்கள் ₹50, வெளிநாடுகளில் இருப்பவர்கள் ₹959 வரை கட்டணம் செலுத்த வேண்டும். Netbanking, Debit/Credit Card அல்லது UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.

6: Acknowledgement Slip பெறவும், விண்ணப்பம் முடிந்தவுடன் 15 இலக்க Acknowledgement Number கிடைக்கும்.இதன் மூலம் உங்கள் PAN கார்டு நிலையை ஆன்லைனில் Track செய்யலாம்.

7: புதிய PAN கார்டு அனுப்பப்படும். சுமார் 15 முதல் 20 நாட்களுக்குள் புதிய PAN கார்டு உங்கள் முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்பப்படும். அதே சமயம், e-PAN (PDF) மின்னஞ்சல் மூலமாகவும் வரும்.

உடனடியாக e-PAN பெற வேண்டுமா?

நீங்கள் விரைவாக soft copy (PDF) பெற விரும்பினால், Income Tax Portal - Download e-PAN தளத்துக்கு சென்று,
PAN எண் + ஆதார் எண் + பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்த்தால், உடனடியாக e-PAN பதிவிறக்கம் செய்யலாம்.

முக்கிய அறிவுரை:

பான் கார்டு தொலைந்தது குறித்து பாதுகாப்பு நோக்கில் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் CSR அல்லது FIR பதிவு செய்துவைப்பது நல்லது. இது எதிர்காலத்தில் எந்தவொரு தவறான பயன்பாட்டையும் தவிர்க்க உதவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+