டோட்டல் ஃபேமிலி எம்எல்ஏ தான்! அரசியலில் சாதித்த லாட்டரி மார்ட்டின் குடும்பம்! 3 பேருமே 3 கட்சி வேற!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் நடக்க வைத்திருக்கும் ஒரு விஷயம் பிரபல லாட்டரி அதிபராக மார்ட்டின் ஒட்டுமொத்த குடும்பமும் வென்றிருப்பது தான். மூவரும் வெவ்வேறு கட்சிகளில் பயணித்து நிலையில் சட்டமன்றங்களை அலங்கரிக்க போகின்றனர். ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தின் மூலமும், லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுக மூலமும், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் தனது கட்சியின் மூலம் சட்டசபைக்குள் நுழைய இருக்கின்றனர்.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை தேர்தலும் புதுச்சேரி சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது வரை வெளியான முடிவுகளின்படி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் இருக்கிறது.

அடுத்த ஆட்சி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிதான் என்பது உறுதியாகி இருக்கிறது. ஆளும் கட்சியான திமுக சுமார் 70 தொகுதிகளிலும், அதிமுக சுமார் 50 தொகுதிகளுக்குள்ளும் சுருங்கி உள்ளது. ஆனால் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட்ட நிலையில் இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் வென்றது.
அந்த மாநிலத்தில் என்ஆர் காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜக நான்கு தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும் வென்றுள்ள நிலையில் மீண்டும் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. மேலும் திமுக 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதிகளிலும் வென்றுள்ளது.
இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியாக பார்க்கப்படுவது புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை தொடங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வென்றது தான். அவர் மட்டுமல்ல அவரது குடும்பமே அங்கு வென்றுள்ளது. பிரபல லாட்டரி அதிபராக மார்ட்டின் மகன் தான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ட்டினின்ன் மனைவி லீமாரோ லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வந்திருக்கிறார். அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.
இந்நிலையில், விஜயின் வெற்றி ஒருபுறம் இருக்க தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி அரசியலிலும் பேசப்படும் ஒரு பெயராக மாறி உள்ளது மார்ட்டின் குடும்பம். தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ப்யூச்சர் கேமிங் நிறுவனம் மூலம் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் முதலீடு செய்து வருகிறார் மார்ட்டின்.
அவரது மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி பாஜகவில் இருந்தார். பிறகு விலகி லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை புதுச்சேரியில் தொடங்கி இருக்கிறார்.
மருமகனான ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் மூலம் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கு வேலை பார்த்தார். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த அவர் அந்த கட்சியில் இருந்து வெளியேறி தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்.
இதற்கிடையே மாட்டினின் மனைவியான லீமா ரோஸ் மார்டின், முதலில் பாஜகவில் பயணித்தார். பின்னர் 11 ஆண்டுகளுக்கு முன்பு பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும், பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்து அரசியலுக்கு வந்ததும் இணைப் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகிய அவர் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications