இரவோடு இரவாக.. மதுரையை நோக்கி விரைந்த நீல நிற ராட்சசன்.. தூங்கா நகரத்திற்கு குஷியோ குஷி.. சூப்பர்
சென்னை: சென்னையில் இருப்பது போலவே அல்ட்ரா மாடல் ஸ்டைல் கொண்ட புதிய லோ ப்ளோர் பேருந்துகள் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன்படி மதுரையில் இந்த பேருந்துகள் இந்த வாரம் அமலுக்கு வர உள்ளன. நேற்று இதற்காக அந்த பேருந்துகள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
முதல் கட்டமாக அசோக் லேலண்ட் பேருந்துகள் சென்னையில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. 80 பேருந்துகள் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது போக மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய அனைத்து நகரங்களுக்கும் சென்னையில் இயங்கும் லோ ஃப்ளோர் பேருந்துகள் வழங்கப்பட உள்ளது. 17 முதல் 38 பேருந்துகள் வரை மாவட்டங்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. மதுரையில் இரண்டாம் கட்டமாக இந்த பேருந்துகள் வழங்கப்பட உள்ளன .

பேருந்துகள்; சென்னை, மதுரை மற்றும் கோவை நகரத்தில் உள்ள பயணிகள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள், விரைவில் பயணம் செய்ய மிகவும் எளிதாக இருக்கும், வரும் மாதங்களில் 1552 தாழ்தள, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் உள்ள பேருந்துகளை பெருநகர போக்குவரத்துக் கழகம் பெற உள்ளது.
இந்த வாகனங்கள் ஜெர்மன் அபிவிருத்தி வங்கியின் (KfW) நிதியுதவியின் கீழ் வாங்கப்படும் பேருந்துகளின் லிஸ்ட் ஆகும். தமிழ்நாட்டில் அதிக அளவில் பேருந்துகள் வாங்கப்பட்டு வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
MTC தவிர, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கு தலா 100 தாழ்தள பேருந்துகளை இதே ஒப்பந்த முறைப்படி வாங்க உள்ளது. முழுமையாக கட்டப்பட்ட 552 தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளது, ஒரு வாரத்தில் KfW அதன் அனுமதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தொடக்கத்தில், 442 தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கு ஏலம் எடுத்தது. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான தாழ்தளப் பேருந்துகளை வாங்குவது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, டெண்டர் நிபந்தனைகளைப் பயன்படுத்தி, லோ-ஃப்ளோர் பேருந்துகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் அதிகரித்து 552 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.
கூடுதல் பேருந்துகள்: சென்னை, மதுரை மற்றும் கோவையில் அல்ட்ரா மாடல் ஸ்டைல் கொண்ட கூடுதல் பேருந்துகளை களமிறக்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த பேருந்துகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நீல நிறத்தில் ஸ்டைலாக இருக்கும் பேருந்துகள் வாங்கப்பட்டு உள்ளன.
இதில் சென்னைக்கான பேருந்துகளை வாங்க, 500 தாழ்தள மின்சார பேருந்துகள் (400 Non A/C & 100 A/C) கொள்முதல் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 3 ஏலதாரர்கள் தங்கள் ஏலத்தை சமர்ப்பித்துள்ளனர்.
1. ஒலெக்ட்ரா
2. ஸ்விட்ச் மொபிலிட்டி (OHM குளோபல்)
3. ஏரோ ஈகிள் ஆட்டோமொபைல் ஆகியவை போட்டியில் உள்ளான.
இது போக KfW நிதியுதவியின் கீழ் 1,771 BS6 டீசல் பேருந்துகளை வாங்குவதற்கான மற்றொரு டெண்டர் விடப்பட்டது. இது சாதாரண பேருந்துகள் ஆகும். MTCக்கான 245 பேருந்துகள் உட்பட ஸ்டாண்டர்ட்-ஃப்ளோர் பேருந்துகளின் எண்ணிக்கை இப்போது 1,614 ஆக உள்ளது. மீதமுள்ளவற்றில், TNSTC விழுப்புரத்திற்கு 347 பேருந்துகளும், சேலம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகளுக்கு தலா 303 பேருந்துகளும், TNSTC மதுரை மற்றும் கோவைக்கு முறையே 251 மற்றும் 115 பேருந்துகளும், TNSTC திருநெல்வேலிக்கு 50 பேருந்துகளும் கிடைக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications