சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரவுண்டு கட்டப்போகும் மழை! அடுத்த இன்னிங்ஸ்.. நாள் குறிச்சாச்சு -நாளை தாழ்வுப்பகுதி.. டிச.8 உக்கிரம்

Google Oneindia Tamil News

சென்னை: நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதி வடதமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.

 வங்கக் கடலில் உருவாகும் புயல்..துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள்..இதுதான் காரணமா? வங்கக் கடலில் உருவாகும் புயல்..துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள்..இதுதான் காரணமா?

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றூ இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த 2 நாட்கள்

அடுத்த 2 நாட்கள்

நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 6 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடகடலோர மாவட்டங்கள்

வடகடலோர மாவட்டங்கள்

7 ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

8 ஆம் தேதி

8 ஆம் தேதி

8 ஆம் தெதி தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மழை நிலவரம்

மழை நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி) தலா 5, புதுச்சேரி, சீர்காழி (மயிலாடுதுறை), திருப்புவனம் (சிவகங்கை), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 4, கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), ராமநாதபுரம், கடலூர், லால்பேட்டை (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), புவனகிரி (கடலூர்), தானியமங்கலம் (மதுரை), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), தேவகோட்டை (சிவகங்கை), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), மயிலாடுதுறை, பாம்பன் (இராமநாதபுரம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), ஏற்காடு (சேலம்), மண்டபம் (இராமநாதபுரம்), மாஞ்சோலை (திருநெல்வேலி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) தலா 3, காரைக்கால், கெத்தை (நீலகிரி), விழுப்புரம், கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), நாகுடி (புதுக்கோட்டை), சிதம்பரம் (கடலூர்), ஆனைப்பாளையம் (கரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), சிதம்பரம் AWS (கடலூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), ஆயின்குடி (புதுக்கோட்டை), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), கிண்ணக்கொரை (நீலகிரி), அண்ணாமலை நகர் (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மேலூர் (மதுரை), மரக்காணம் (விழுப்புரம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), பொன்னனியாறு அணை (திருச்சி) தலா 2, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), கடலாடி (ராமநாதபுரம்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), வைப்பார் (தூத்துக்குடி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), மீமிசல் (புதுக்கோட்டை), மணமேல்குடி (புதுக்கோட்டை), சித்தம்பட்டி (மதுரை), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), வலங்கைமான் (திருவாரூர்), பள்ளமொர்குளம் (ராமநாதபுரம்), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), வெட்டிகாடுவூர் (தந்தைகாடு) , குன்னூர் (நீலகிரி), முத்துப்பேட்டை (திருவாரூர்), மணப்பாறை (திருச்சி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), வானூர் (விழுப்புரம்), அவலூர்பேட்டை (விழுப்புரம்), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), வாலினோகம் (ராமநாதபுரம்), பாண்டவையார் (திருவாரூர்), போளூர் (திருவண்ணாமலை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருவாரூர், நாங்குநேரி (திருநெல்வேலி), திருவண்ணாமலை, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மன்னார்குடி (திருவாரூர்), சூரங்குடி (தூத்துக்குடி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), ஜெயம்கொண்டம் (அரியலூர்), கோலியனூர் (விழுப்புரம்), நீடாமங்கலம் (திருவாரூர்), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), பாடலூர் (தஞ்சாவூர்), பெரம்பலூர்), அரசூர் (விழுப்புரம்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கள்ளந்திரி (மதுரை), பஞ்சப்பட்டி (கரூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), பர்லியார் (நீலகிரி), தங்கச்சிமடம் (இராமநாதபுரம்), நத்தம் (திண்டுக்கல்), திருநெல்வேலி, வளவனூர் (விழுப்புரம்), குன்னூர் PTO (நீலகிரி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), திருவாடானை (ராமநாதபுரம்) தலா 1.

English summary
A low pressure area will form over the Bay of Bengal tomorrow and it will strengthen into a low pressure area in the next 48 hours, according to the Chennai Meteorological Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X