நீலகிரியில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இதனால் நீலகிரியில் அதி தீவிர மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம், காற்றழுத்த மேலடுக்கு, கீழடுக்கு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் வலுப்பெறும். இந்த நிலையில் இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

திண்டுக்கல்
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தொடங்குகிறது.

மழை பெய்கிறது
வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதிலும் சென்னையில் வரும் கோடையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க இந்த ஆண்டு பருவமழை மிக அவசியமானதாக உள்ளது.

ஜில் காற்று
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியுள்ளது. இரு தினங்களாக சென்னை ஊட்டி, கொடைக்கானல் போல் ஜில்லென இருப்பதாக வீடுகளில் ஏசிக்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications