தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும்
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்புவரை கன மழை கொட்டி தீர்த்தது.

தூத்துக்குடி மழைப் பொழிவு
தூத்துக்குடி மற்றும் அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிகப்பெரிய மழைப்பொழிவு பதிவாகி சாதனை படைத்தன.

காற்றழுத்த தாழ்வு பகுதி
தற்போது சற்று மழை ஓய்ந்து உள்ள நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழை
இதன் காரணமாக, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மிதமான மழை
தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென் அரபிக் கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications