Loyola college survey: இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? சீமானை முந்திய விஜய்! உதயநிதிக்கு 3வது இடம்
சென்னை: சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்கிற கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தனர். இதில், மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சியை தக்க வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இளம் தலைமுறை வாக்காளர்கள் விஜய் பக்கம் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? என்பது குறித்து தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் சென்று கருத்துக்களை பெற்று அதை தொகுத்து வழங்கியுள்ளனர் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்.

இதன்படி அதிக வாக்குகளை பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது என்றும், திமுகவை தொடர்ந்து இரண்டாவது இடத்திற்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் என்றும். அதிமுக மூன்றாவது இடம் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல கடந்த 2021ல் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? என்கிற கேள்விக்கு ஆம் என்று 25% பேரும், ஓரளவு என்று 17% பேரும், நிறைவேற்றவில்லை என்று 47% பேரும் தெரிவித்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு
- நன்று - 37%
- சரியில்லை - 54%
- கருத்து சொல்ல விரும்பவில்லை என்று - 39%
என சொல்லியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல விஜய்யின் வருகையால் எந்த கட்சிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்கிற கேள்விக்கு முதலில் திமுக என்றும், இரண்டாவது விசிக எனவும் மக்கள் கூறியிருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், விஜய்யின் சுற்றுப்பயணம் தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்கிற கேள்விக்கு ஆம் என்று 41% மக்களும், இல்லை என்று 24%, ஓரளவு என 27% பேர் தெரிவித்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 41.3% பேர் 31-45 வயதுக்கு உட்பட்டவர்கள். அதேபோல 21-30 வயதினர் 25.6% பேரும், 46-60 வயதினர் 23.5% பேரும் பங்கேற்றிருக்கிறார்கள். மதம் ரீதியில் இதில் பங்கேற்றவர்கள் என்று பார்க்கும்போது
- இந்துக்கள் - 81.71%
- கிறிஸ்தவர்கள் - 10.55%
- இஸ்லாமியர்கள் - 7.75%
மொத்தம் 235 தொகுதிகளில் 81,375 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. நகரங்களில் 54.8 சதவிகிதம் மற்றும் கிராமங்களில் 45.2 சதவிகித மக்களிடம் கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இளம் தலைமுறை வாக்காளர்கள் 1.45 கோடி பேர் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் விஜய்க்கு ஆதரவளிப்பார்கள் என்றும், இரண்டாவதாக அண்ணாமலைக்கும் மூன்றாவதாக உதயநிதிக்கும் நான்காவதாக சீமானுக்கும் ஆதரவளிப்பார்கள் என்றும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications