Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்யும் தொலைபேசி எண் வேலை செய்யாததால், சிலிண்டரை எப்படி புக் செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது இஸ்ரேல்- அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் ஆலைகள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதால் கிடைக்கப்பெறும் டீசல், பெட்ரோல், கேஸ், விமான எரிப்பொருள் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

LPG Cylinder Booking

கச்சா எண்ணெய் (crude oil) ஒரு கலவை - அதில் பல்வேறு ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகள் (carbon atoms எண்ணிக்கை வேறுபடும்) உள்ளன. இதை ரிஃபைனரியில் (பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை) பிரிக்கும் போது பெட்ரோல் மற்றும் எல்பிஜி இரண்டும் கிடைக்கின்றன.

அதாவது கச்சா எண்ணெய்யை நீண்ட குழாயில் வைத்து 350- 400 டிகிரி செல்சியஸில் சூடுப்படுத்தும் போது குறைந்த கொதிநிலை உள்ள மூலக்கூறுகள் மேலே ஏறி குளிர்ந்து திரவமாகின்றன. அதிக கொதி நிலை உள்ளவை கீழே தங்கிவிடுகின்றன.

அந்த வகையில் எல்பிஜி மிகவும் மேலேயே கிடைத்துவிடுகிறது. அதன் பிறகு பெட்ரோலை 40 முதல் 200 டிகிரி செல்சியஸில் வெப்பப்படுத்தும் போது கிடைக்கிறது. விமான எரிப்பொருள் , டீசல், உள்ளிட்டவை அடுத்தடுத்த நிலைகளில் கிடைக்கின்றன.

எனவே கச்சா எண்ணெய்யை சூடாக்கும் போது எல்பிஜி முதலிலேயே கிடைத்துவிடுகிறது. பெரிய மூலக்கூறுகள் கொண்ட பெட்ரோல் நடுபகுதியில்தான் கிடைக்கிறது.

அந்த வகையில் சுத்திகரிப்பு செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எல்பிஜி கிடங்குகள் மற்றும் ஏஜென்சி அலுவலகங்களுக்கு வெளியே உள்ள நீண்ட வரிசைகளும், கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 3,000ஐ எட்டுவதும் இந்த நிலைமைக்கு சான்றாக அமைகின்றன.

எல்பிஜி பற்றாக்குறை குறித்த தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்த்து, அமைதியாக இருக்குமாறு அவர்கள் அரசு பொதுமக்களை வலியுறுத்தியது.

LPG Cylinder Booking

எல்பிஜி ரீஃபில் முன்பதிவுக்கான காத்திருப்பு நேரம் (முன்பு 14 நாட்கள், பின்னர் 21 நாட்கள்) 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், இரட்டை இணைப்புகளுக்கு 30 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டது.

மார்ச் 7 அன்று, உள்நாட்டு 14.2 கிலோ சிலிண்டர்களின் விலை ₹60 உயர்த்தப்பட்டது. வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர்களின் விலை ₹115 அதிகரிக்கப்பட்டது. மொத்த முன்பதிவுகளைக் கட்டுப்படுத்த, அரசு காத்திருப்பு காலத்தையும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையையும் உயர்த்தியபோதிலும், இந்த நடவடிக்கைகள் நுகர்வோரிடையே பீதியை அதிகரித்தன.

இந்திய எண்ணெய் நிறுவனம் வழக்கமாக புக்கிங் செய்ய கொடுத்துள்ள செல்போன் எண் 77189 55555 என்ற எண் வேலை செய்யவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு போன் செய்த போது இந்த நண்பர் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது என வந்தது.

இந்த நம்பர் வேலை செய்யாததால் கேஸ் ஆபிஸுக்கு மக்கள் படையெடுக்கிறார்கள். இந்த நிலையில்தான் தொலைபேசி எண் இயங்கவில்லை என்றால் Indian Oil ONE என்ற செயலியை டவுன்லோடு செய்யுங்கள்.

நீங்கள் எந்த போன் நம்பரில் கேஸ் இணைப்பு பெற்றுள்ளீர்களோ அந்த எண் வழியாகத்தான் இந்த செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த முடியும். இதில் நீங்கள் போன் நம்பரை குறிப்பிட்டால் உங்கள் கேஸ் இணைப்பு எண், டீலர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வருகின்றன.

அது போல் ஏற்கெனவே புக் செய்திருந்தால் அதை டிராக் செய்யும் வசதியும் உள்ளது. Refill என்ற ஆப்ஷனை கிளிக் செய்து சிலிண்டர் முன் பதிவு செய்யலாம். எனினும் இந்த ஆப்பிலும் சிலருக்கு புக் ஆகவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+