1ஆம் தேதி காலையில் வந்த ஹாப்பி நியூஸ்! அதிரடியாகக் குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! சென்னையில் எவ்வளவு?
சென்னை: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் ரூ.1906-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.
சென்னை நகரில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலையை நிர்ணயிக்கின்றன. LPG விலைகளை மத்திய அரசு வழக்கமாக மாதந்தோறும் திருத்தம் செய்யும் நிலையில் இந்த மாதம் விலை குறைந்துள்ளது.

அந்த வகையில் மே ஒன்றாம் தேதியான இன்று சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்திருக்கும் நிலையில் புதிய விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம். கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. சர்வதேச அளவில் சந்தை நிலவரத்தை பொறுத்துதான் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் ஆகியவை விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
அமெரிக்காவின் பதிலுக்கு பதில் வரி விதிப்பு, போர் பதற்றம் உள்ளிட்ட அவற்றின் காரணமாக கடந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இந்த நிலையில் மே மாதத்தின் முதல் நாளில் பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலை மாற்றத்தை அறிவித்திருக்கின்றன. அதன்படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையானது 15 ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய சூழலில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1906 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் 14. இரண்டு கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாடு கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த மாதத்தை போலவே 868.50 பைசா ஆகவே தொடர்கிறது. இதேபோல 5 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றம் இன்றி 323 ரூபாயாகவும், 47.5 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் 50 பைசா குறைந்து 4,761 ரூபாயாக உள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை 853 ரூபாயாகவும், வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 1747.50 பைசாவாக இருக்கிறது. மும்பையில் 852.50 பைசாவாகவும், பெங்களூருவில் 855 ரூபாயாகவும் இருக்கிறது. அதிகபட்சமாக பீகார் தலைநகர் பாட்னாவில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 942.50 ரூபாயாகவும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 1997.50 ரூபாயாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications