அம்மாடியோவ்.. ஒரே நாளில் ரூ.105 உயர்ந்தது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்.. இப்போது விலை என்ன?
சென்னை: நாடு முழுக்க வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. 19 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 105 ரூபாய் உயர்ந்துள்ளது.
சமையல் எரிவாயு விலை தொடர்ந்து நாடு முழுக்க உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் நான்கு முறைக்கும் மேல் சிலிண்டர் விலை உயர்ந்தது.
அதை தொடர்ந்து தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உண்டாக்கி உள்ளது. பெட்ரோல் டீசல் விலை இதனால் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல்
5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின் நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலையில் கணிசமான உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் நாடு முழுக்க வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. இன்று காலை இந்த புதிய உயர்வு அமலுக்கு வந்தது. 19 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 105 ரூபாய் உயர்ந்துள்ளது.இதனால் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் 2145.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிலிண்டர்
அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 27 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.5 கிலோ சிலிண்டரின் புதிய விலை 569 ரூபாய் ஆகும். மாறாக வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த விதமான உயர்வும் ஏற்படவில்லை. இந்தியாவில் 14.2 கிலோ எடை கொண்ட குடும்ப பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 902.50 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசல் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் 99 டாலரை சர்வதேச அளவில் நெருங்கி உள்ளது. இருப்பினும் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை விவரம் பின்வருமாறு.

கொல்கத்தா
பெட்ரோல்- Rs 104.67 per litre
டீசல் - Rs 89.79 per litre
போபால்
பெட்ரோல்- Rs 107.23 per litre
டீசல் - Rs 90.87 per litre
ஹைதராபாத்
பெட்ரோல்- Rs 108.20 per litre
டீசல் - Rs 94.62 per litre

சென்னையில் விலை என்ன?
சென்னை
பெட்ரோல்- Rs 101.40 per litre
டீசல் - Rs 91.43 per litre
மும்பை
பெட்ரோல்- Rs 109.98 per litre
டீசல் - Rs 94.14 per litre
டெல்லி
பெட்ரோல்- Rs 95.41 p per litre
டீசல் - Rs 86.67 per litre
பெங்களூர்
பெட்ரோல்- Rs 100.58 per litre
டீசல் - Rs 85.01 per litre
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications