கேஸ் சிலிண்டர் விலை குறைகிறதா? வருமான வரி முதல் கிரெடிட் கார்டு வரை..நாளை வரப்போகும் மாற்றம் இதுதானா
சென்னை: இன்றுடன் ஜுன் மாதம் முடிந்து, நாளை ஜூலை துவங்க உள்ள நிலையில், மக்களுடன் தொடர்புடைய சில நேரடி விஷயங்களில், அதிரடி மாற்றங்கள், நம் நாட்டில் நிகழ போவதாக தெரிகிறது.. இந்த புதிய முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் நாளை முதல், 4 முக்கியமான விஷயங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.. இதில் முக்கியமானது, சமையல் கேஸ் விலை ஆகும்..
எல்பிஜி சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு மாதமும் அரசு எண்ணெய் நிறுவனங்களால் தொடர்ந்து திருத்தம் செய்யப்படுகிறது.. கடந்த முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது... எனவே, எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது..
எண்ணெய் விலை: மேலும், எல்பிஜி எரிவாயு விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது.. எனவே, எண்ணெய் நிறுவனம், இது தொடர்பாக விலைஉயர்வு குறித்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள்.. முதலில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டால், இதற்கு பிறகு, மத்திய அரசும் தன் சார்பாக அந்த விலை உயர்வை குறைக்கவே செய்யும்..

அதிலும், இந்த முறை நிறையவே விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. காரணம், விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. அதனால், மக்களுக்கு சில சலுகைகளை தர மத்திய அரசு திட்டம் வைத்திருக்கலாம்.. அல்லது, எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பையும் சர்ப்ரைஸாக அளிக்கலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, எல்பிஜி சிலிண்டர் விலையிலும், கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் வர இருப்பதாக சொல்கிறார்கள்.
சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி: அடுத்ததாக, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலையில் ஏற்படும் மாற்றங்கள் மாதத்தின் முதல் தேதி அல்லது எல்பிஜி போன்ற முதல் வாரத்தில் காணப்படுகின்றன. டெல்லி, மும்பை போன்ற பிற நகரங்களில், எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் வாரத்திலேயே சிஎன்ஜி-பிஎன்ஜி விகிதத்தை மாற்றுகின்றன... இப்படிப்பட்ட சூழலில், ஜூலை மாதத்தில் விலையில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெடிட் கார்டு: அதேபோல, வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு செலவுகளுக்கு ஜூலை 1, 2023 ஆம் ஆண்டு முதல் சிஎஸ் கட்டணத்தை விதிக்கும் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2023 முதல் வெளிநாட்டில் உள்ள கிரெடிட் கார்டு செலவுகளுக்கு TCS கட்டணத்தை விதிக்கும் ஏற்பாடாக இருக்கலாம். எனவே, உங்கள் செலவு 7 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், நீங்கள் 20 சதவீத டிசிஎஸ் செலுத்த வேண்டும்.
இந்த கட்டணம் கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான செலவினங்களில் 5 சதவீதமாக குறைக்கப்படும். ஆனால், வெளிநாட்டில் கல்விக்காக கடன் பெற்ற வரி செலுத்துவோர் 7 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் 0.5 சதவீத டிசிஎஸ் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
வருமான வரி கணக்கு: வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு: வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் நெருங்குகிறது. உங்கள் ஐடிஆரை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றால், ஜூலை 31ம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications