கேஸ் சிலிண்டர் வேணுமா.. இந்த நம்பருக்கு போன் அடிங்க.. கேஸ் இணைப்பில் பெயர் எப்படி மாற்றனும் தெரியுமா?
சென்னை: ஆன்லைனில் கேஸ் எப்படி புக் செய்வது தெரியுமா? கேஸ் சிலிண்டரில் பெயர் மாற்றம் செய்வது எப்படி தெரியுமா? ரொம்ப சிம்பிள்
சமையல் சிலிண்டரை புக்கிங் செய்து பெற்றுக்கொள்வதற்கு இப்போது நிறைய ஸ்மார்ட் வழிகள் வந்துவிட்டன.. அந்தவகையில், போன் கால், SMS, ஆன்லைன், மொபைல் ஆப், வாட்ஸ் அப் இப்படி பல வசதிகள் உள்ளன.. பல வழிகள் எளிமையான முறையில் வந்துவிட்டாலும்கூட, சிலருக்கு எப்படி கேஸ் புக்கிங் செய்வது என்று தெரியவில்லை.

செல்போன் நம்பர்: Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். நீங்கள் HP கேஸ் வாடிக்கையாளராக இருந்தால், 92222 01122 என்ற எண் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
நீங்கள் Bharat Petroleum சிலிண்டர் வாடிக்கையாளராக இருந்தால், 1800224344 என்ற எண்ணிற்கு "Hi" என மெசேஜ் அணுப்பினாலே உங்களுடைய சிலிண்டர் புக் செய்யப்படும்.
செல்போன் நம்பர்: முக்கியமாக உங்கள் மொபைல் நம்பர் சரியாக பதிவு செய்திருப்பது அவசியம். அதுமட்டுமின்றி Paytm, PhonePay, Google pay மூலமாகவும் சிலிண்டரையும் முன்பதிவு செய்யலாம். கிரெடிட் கார்டு மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்ய விரும்புவோர் சலுகைகளை சரிபார்த்து அந்தந்த தளத்தின் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எப்படி பெயர் மாற்றம் செய்யலாம்: கேஸ் யாருடைய பெயரில் இருக்கிறதோ, அவர் ஆணாக இருந்தால், அவரிடம், அந்த பெயரை மாற்ற ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் தேவை. அவர் திருமணமான பெண்ணாக இருந்தால், அவரது மகளிடம், அவரது கணவரிடம் என 2 பேரிடமிருந்தும், உங்கள் பெயருக்கு மாற்ற, ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் தனித்தனியாக பெற்றுக் கொள்ள வேண்டும்.
- இந்த சான்றிதழை, உங்களது ரேஷன் கார்டின் நகலுடன் சேர்த்து, உங்கள் கேஸ் இணைப்பு உள்ள அலுவலகத்தில் தரவேண்டும்.
- விநியோகஸ்தர் அலுவலகத்தில் இருப்பவர், உங்களுடைய பெயர் அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர் பெயரில் வேறு ஏதாவது கேஸ் இணைப்பு உள்ளதா என்பதை நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
- இதில் எந்த பிரச்சனையும் இல்லையென்றால் கேஸ் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றித்தருவார்கள். ஆனால், புதிதாக பெயர் மாற்றப்படும்வரை, கேஸ் விநியோகம் உங்களுக்கு செய்யப்பட மாட்டாது.
ஒருவேளை இணைப்பு யாருடைய பெயரில் வாங்குகிறீர்களோ, அவர் இறந்து விட்டால், அவரது இறப்புச் சான்றிதழின் நகல் மற்றும் வாரிசு சான்றிதழின் நகல் இரண்டையுமே கேஸ் இணைப்பு தரும் அலுவலகத்தில் கொண்டுபோய் தர வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications