சமையல் கேஸ் சிலிண்டர் விலை இன்று ரூ. 25 உயர்வு- சென்னையில் 835 ரூபாய்க்கு விற்பனை
எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் விலை ரூ. 25 அதிகரித்துள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் பிப்ரவரியில் 100 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது. பிப்ரவரியில் சமையல் கேஸ் சிலிண்டர் 100 ரூபாய் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 25 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு சிலிண்டர் ரூ.835 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி 16ம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஜனவரி மாதத்தில் 710 ரூபாயாக விற்பனையானது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. 16ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலும் 25 ரூபாய் உயர்ந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்தது. சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.810 ஆக விற்பனை செய்யப்பட்டது.
மார்ச் 1ஆம் தேதியான இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்ந்து ஒரு சிலிண்டர் 835 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் 1ம் தேதி 610 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு சென்னையில் தற்போது ரூ.835 ஆக உள்ளது. சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications