சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு... இல்லத்தரசிகள் அதிர்ச்சி
எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் விலை ரூ. 50 ரூபாய் அதிகரித்துள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் ஒரே மாதத்தில் 75 ரூபாய் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 4ஆம் தேதி 25 ரூபாய் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 50 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு சிலிண்டர் ரூ.785 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் சிலிண்டரின் விலை 75 ரூபாய் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி 16ம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. அதேநேரம் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுவதால் அதன் விலை தினசரி கூடுவதாகவே உள்ளது. இதேபோல் 15 நாட்களுக்கு ஒரு முறை சமையல் எரிவாயு சிலிணடர் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்வை சந்திக்கிறது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது அதன்படி சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.735 ஆக இந்த மாத தொடக்கத்தில் உயர்ந்தது. இன்று மீண்டும் 50 ரூபாய் உயர்ந்து ஒரு சிலிண்டர் 785 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் 1ம் தேதி 610 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு சென்னையில் தற்போது ரூ.785 ஆக உள்ளது.
தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இம்மாத தொடக்கத்தில் ரூ.56.50 உயர்ந்து ரூ.1,410.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிஅதன் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் திருத்தி அமைத்து வருகின்றன.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications