Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் பட்ஜெட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.. இப்போது மத்திய அரசு வழங்கி வரும் மானியத் தொகை, குறிப்பாக உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் மானியம் மற்றும் இதர பயனாளர்களுக்கான மானியம் ஆகியவை முறையாக வங்கி கணக்கில் வந்து சேருகிறதா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது.. இதை பற்றி தான் சுருக்கமாக இங்கே பார்க்க போகிறோம்.

பல நேரங்களில் கேஸ் ஏஜென்சியில் இருந்து சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டாலும், அதற்கான மானியத் தொகை வங்கி கணக்கிற்கு வருவதில் தாமதம் ஏற்படலாம் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளால் வராமலேயே போகலாம்.

300 LPG subsidy LPG subsidy 2026 India gas cylinder subsidy status check LPG subsidy online mobile subsidy check India DBT subsidy status Ujjwala scheme subsidy LPG subsidy credit check subsidy not received solution LPG eligibility India gas subsidy latest update check subsidy without bank LPG subsidy via mobile DBT LPG India 300 subsidy check 300

இதற்காக ஒவ்வொரு முறையும் வங்கிக்கு சென்று பாஸ்புக்கை அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை.. உங்கள் கையில் உள்ள மொபைல் போன் மூலமாகவே சில நிமிடங்களில் இதைச் சரிபார்க்கும் புதிய வசதி இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளது..

முதலில், உங்கள் சிலிண்டர் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.. இண்டேன் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas) அல்லது ஹெச்பி (HP) என எதுவாக இருந்தாலும், 'MyLPG.in' என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று உங்கள் மானிய நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்..

அங்கு உங்கள் நிறுவனத்தின் லோகோவைத் தேர்வு செய்தவுடன், 'Give your feedback online' என்ற பகுதிக்குள் செல்ல வேண்டும்.. அதில் LPG மற்றும் Subsidy Related (PAHAL) என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், உங்கள் செல்போன் நம்பர் அல்லது 17 டிஜிட் எல்பிஜி ஐடி (LPG ID) கேட்கப்படும்.. இதை பதிவிட்டதுமே கடந்த சில மாதங்களில் நீங்கள் வாங்கிய சிலிண்டர்கள் மற்றும் அதற்கு வழங்கப்பட்ட மானியத் தொகை எவ்வளவு, எந்தத் தேதியில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்ற மொத்த விபரங்களும் ஸ்கிரீனில் தோன்றும்..

அதேபோல வங்கி கணக்கில் மானியம் வராததற்கு பல காரணங்கள் இருக்கலாம்.. உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் நம்பர் சரியாக இணைக்கப்படாமல் இருப்பது அல்லது கேஸ் ஏஜென்சியில் உங்கள் வங்கி விபரங்கள் தவறாகப் பதிவாகி இருப்பது முக்கியக் காரணமாகும்.

சில நேரங்களில் உங்கள் கேஸ் இணைப்புடன் கேஒய்சி (KYC) அப்டேட் செய்யப்படாமல் இருந்தாலும் மானியம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.. இத்தகைய சூழலில், ஆன்லைன் மூலமாகவே புகார்களைப் பதிவு செய்யும் வசதியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.. அதே இணையதளத்தில் 'Complaint' என்ற பகுதியில் உங்கள் குறைகளைப் பதிவிடலாம் அல்லது அந்தந்த கேஸ் நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்..

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை, மாத இறுதியில் வரும் இந்தச் சிறு தொகை குடும்ப செலவுகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.. குறிப்பாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் சிலிண்டர் விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ள சூழலில், பழைய மானிய நிலுவைத் தொகையைச் சரிபார்த்து வாங்குவது புத்திசாலித்தனம் என்கிறார்கள் நிபுணர்கள்.

பல இடங்களில் கேஸ் ஏஜென்சிகள் மானியம் குறித்துச் சரியான பதிலைச் சொல்லாத நிலையில், மக்கள் இந்த டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவது அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும்.. மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் வரும் பெண்களுக்கு இந்த 300 ரூபாய் மானியம் நேரடியாக அவர்கள் கணக்கிற்குச் செல்வதால், அதன் பலன் முழுமையாகக் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வது அவசியமாகும்..

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வசதிகள் சாதாரண மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.. அதனால் இனிமேல் மானியத்திற்காக வங்கி வாசலில் காத்திருக்காமல், வீட்டிலிருந்தே இந்த எளிய வழிமுறையைப் பின்பற்றி உங்கள் உரிமையை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இந்தத் தகவலை உங்கள் பக்கத்து வீட்டு இல்லத்தரசிகளுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.. அவர்கள் தங்கள் பட்ஜெட்டைத் திட்டமிடவும், விடுபட்ட மானியத் தொகையைப் பெறவும் இது ஒரு மிகச்சிறந்த விழிப்புணர்வுச் செய்தியாக அமையும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+