கேஸ் சிலிண்டர் மானியத்துக்கு ஆப்பு.. ’இதை’ செய்யலைனா அவ்வளவு தான்! மத்திய அரசு சொன்ன அட்வைஸ்!
டெல்லி: மானிய விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாகப்பட்டுள்ளதாகவும். கைரேகை அல்லது கருவிழி பதிவு மூலம் இதனை சரிபார்க்க வேண்டும் என அறிவித்துள்ளது
மத்திய அரசு பொதுமக்களுக்கு பல்வேறு பொருட்களுக்கு மானியத்தை வழங்கி வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானிய விலை வழங்கப்பட்டு வருகிறது.

முன்பு சிலிண்டர் விலையில் கழித்துக் கொள்ளப்பட்டு மானியம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பயனாளிகளின் வங்கி கணக்குக்கு மானிய தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் மானியம்
அக்டோபர் 1ஆம் தேதி முதல் மானிய விலையில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதாருவுடன் பயோமெட்ரிக் சரிபார்ப்பை நிறைவு செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு
அதே நேரத்தில் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்துள்ள வாடிக்கையாளர்கள் மீண்டும் இந்த நடைமுறையை மேற்கொள்ள தேவையில்லை என்றும், அவர்கள் வழக்கம் போல் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதுவரை பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை நிறைவு செய்யவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் முதலில் அந்த நடைமுறையை முடித்த பிறகு மானியத்துடன் கூடிய சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார்
மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிகம் மற்றும் தொழில் பயன்பாட்டுக்கு முறைகேடாக மாற்றி அனுப்புவதை தடுப்பதுதான் இதன் முக்கிய நோக்கம் என கூறுகிறது மத்திய அரசு. ஒவ்வொரு சமையல் எரிவாயு இணைப்பையும் ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளருடன் இணைப்பது மூலம் போலியான மற்றும் தகுதியற்ற எரிவாய் இணைப்புகளை நீக்க முடியும் என்கிறது.
மத்திய அரசு
மேலும் இதன் மூலம் மானியத்துக்கு தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் மானியம் கிடைப்பது உறுதி செய்ய முடியும் என்றும் மத்திய அரசு கருதுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் பயோமெட்ரிக் சரி பார்ப்பை மேற்கொள்ள ஏற்கனவே பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிலிண்டர் விநியோகிக்கும் நேரத்தில் விநியோக ஊழியர் பயன்படுத்தும் எண்ணெய் நிறுவனத்தின் கைபேசி செயலி மூலம் வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் சரிபார்ப்பை நிறைவு செய்யலாம்.
இண்டேன்
மேலும் சிலிண்டர் விநியோக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று இந்த நடைமுறையை முடித்துக் கொள்ளலாம் இது தவிர என்னை நிறுவனங்களின் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலமும் வீட்டில் இருந்தபடியே ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இண்டேன் வாடிக்கையாளர்கள், Indian Oil ONE செயலி மூலம் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.
பாரத்கேஸ்
பாரத்கேஸ் வாடிக்கையாளர்கள், HelloBPCL செயலி மூலம் சரிபார்ப்பை நிறைவு செய்யலாம். ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள், HP Pay செயலி மூலம் வீட்டில் இருந்தே சரிபார்ப்பு நடைமுறையை மேற்கொள்ளலாம். இதனால், சிலிண்டர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல முடியாதவர்களும் சம்பந்தப்பட்ட செயலியை பயன்படுத்தி இந்த நடைமுறையை முடித்துக்கொள்ள முடியும்.
உதவி எண்
ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது சிரமம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் 1800 233 3555 என்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம். எனவே, மானிய விலையில் வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்கள் அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பாகவே தங்களது ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு நிலையை சரிபார்த்து, தேவைப்பட்டால் அதை நிறைவு செய்து கொள்ள வேண்டுமெனவும் வாடிக்கையாளர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
