பிரபாகரன் பிறந்த நாள்.. ராமதாஸ் புகழாரம்.. உலகமெங்கும் தமிழர்கள் கொண்டாட்டம்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் உலகமெங்கும் தமிழர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
இன்று பிரபாரகனின் பிறந்த நாள் ஆகும். இதையொட்டி பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் அவரது பிறந்த நாளை கேக் வெட்டி பாடல்கள் வெளியிட்டு கொண்டாடியுள்ளனர். செ ன்னையிலும் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ராயபுரத்தில் தந்தை பெரியார் தி.க சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் இயக்குநர் வ. கெளதமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பறை இசை முழக்கி பட்டாசு வெடித்து, மாட்டிறைச்சி பரிமாறி விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
|
கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம்
இதேபோல உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் பிரபாகரனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேசமயம், ஈழத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தடுக்கும் முயற்சிகள் அதிக அளவில் காணப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி எம்.கே. சிவாஜிலிங்கம் பிரபாகரன் பிறந்த நாளைக் கொண்டாட கேக்குடன் கிளம்பியபோது அவரை போலீஸார் வீட்டுக்கு வெளியே கைது செய்தனர். பின்னர் அவரதிடமிருந்து கேக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
|
வீட்டை சுத்தப்படுத்தியவர்கள் கைது
வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் பிறந்த வீட்டுக்கு வெளியே சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நான்கு தமிழ் இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். பிரபாகரன் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக இவர்கள் வீட்டைச் சுத்தப்படுத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பிரபாகரன் வீடு உள்ள பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
|
வீரம் விளைந்த நாள் - டாக்டர் ராமதாஸ்
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று. வீரம் விளைந்த நாள் இன்று. பிரபாகரனின் கனவான தமிழீழத்தை வென்றெடுப்பது தான் அவரது வீரத்திற்கும், தியாகத்திற்கும் நாம் செலுத்தும் மரியாதை ஆகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
|
தலைவன் பிறந்தான் - நாம் தமிழர்
தலைவன் பிறந்தான்!
தமிழன் நிமிர்ந்தான்!
எம் தலைவரின் பிறப்பு!
தமிழினச் சிறப்பு!
நிறைந்த அன்புகொண்டு நெஞ்சார வாழ்த்துகிறோம்!
வாழ்க! வாழ்க! எம் இறையே!
வாழ்க! வாழ்க! நீ நிறைய!
அன்னைக்குப் பிள்ளைகளின் பிறந்தநாள் வாழ்த்துகள்!
|
ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் - சதீஷ்
தமிழ் தேசியத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்ததினம் இன்று. தார் பூசி அழிக்கப்பட்டிருக்கும் அவர் பெயரும் புலி போல் தோன்றும் அதிசயம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications