Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலையாள சினிமாவை தலையில் தூக்கி வைத்தோமே.. "லப்பர் பந்து" படத்தை அவுங்க என்ன செய்தார்கள் பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான "லப்பர் பந்து" திரைப்படம், திரையுலகில் புதிய வரலாறு படைத்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" போன்ற பெரிய படங்களுடன் போட்டியிட்டு, மூன்றாவது வாரத்திலும் கூட திரையரங்குகளை நிரப்பி வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இயல்பான படங்களை கொண்டாடுவோம் என்று சொல்லிக்கொள்ளும் கேரளாவில்தான் வசூல் மிக மிக கம்மியாக வந்துள்ளது.

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில், கிராமப்புற கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியான, லப்பர் பந்து படம், இளைஞர்களின் மனதில் நேரடியாகப் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா, பால சரவணன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 32.29 கோடி ரூபாய் வசூலித்து 545.80% லாபம் ஈட்டியுள்ளது. இது சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கும், கன்டென்ட் நன்றாக இருந்தால் பெரிய வெற்றி கிடைக்கும் என்பதற்கு சான்றாகும்.

lubber pandhu kerala box office

படம் குறித்த பார்வையாளர்களின் நேர்மறையான விமர்சனங்கள், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மவுத் டாக் என்பார்களே அதுபோன்ற வெற்றியை இது ஈட்டித் தந்துள்ளது. சேது, தூள், டிமாண்டி காலனி, பீட்சா போன்ற பல படங்கள் இப்படித்தான் மவுத் டாக் மூலம் மக்களிடையே பரவி வெற்றிக்கொடியை நாட்டியது வரலாறு. அந்த லிஸ்டில் "545 சதவீதம்" லாபம் ஈட்டி அசத்தியுள்ளது.

நல்ல கதை இருந்தால், எந்தப் படமும் வெற்றி பெறும் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. 1980களில் வரவேண்டிய கதையை எடுத்து வைத்த கோட் இயக்குநர் வெங்கட் பிரபு, 90களில் வர வேண்டிய கதையை எடுத்து வைத்த வேட்டையன் இயக்குநர் ஞானவேல், இந்தியன் 2 ஷங்கர் போன்றோருக்கு லப்பர் பந்து ஒரு பாடம்.

பார்வையாளர்கள் புதிய விதமான கதைகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படங்கள் வெற்றி பெறும் என்பதையும் இந்தப் படம் காட்டுகிறது. குறிப்பாக மலையாள திரைப்படங்கள் போல மக்களோடு கலந்த இயல்பான கதையை படமாக எடுத்தால் தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்பதையும் இந்த படம் காட்டிவிட்டது. பல மலையாள படங்களை தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற வைத்துள்ளது உதாரணம்.

தியேட்டர்களுக்கு போயோ, அல்லது ஓடிடியில் பார்த்து சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து கட்டுரை எழுதியோ அந்த படத்திற்கும், அதன் கலைஞர்களுக்கும் புகழைத் தேடி அவர்கள் வாழ்க்கை உயர கை கொடுத்தது தமிழர்கள். பிரேமலு, பெங்களூர் டேஸ், பிரேமம் என பல உதாரணங்கள் உண்டு. அவ்வளவு ஏன்.. விட்டலாச்சாரி காலத்து கதையுடன் வந்த பிரம்மயுகத்துக்கு கூட ஆஹா, ஓஹோ என்று ரைட் அப் எழுதியது தமிழர்கள். ஆனால், லப்பர் பந்து படத்திற்கோ, அல்லது மெய்யழகன் படத்திற்கோ மலையாள ரசிகர்கள் இப்படியான ஆதரவை தந்தார்களா என்றால் இல்லவே இல்லை. எங்குமே பாராட்டு பதிவுகளை பார்க்க முடியவில்லை. படத்தின் வசூலுமே கேரளாவில் ஈ ஓட்டுகிறது.

lubber pandhu kerala box office

இத்தனைக்கும் இரு படங்களும் மலையாள இயக்குநர்கள் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம்தான். லப்பர் பந்து இயல்பான வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்டது. ஆனால் மலையாள படங்கள் போல ஸ்லோ கிடையாது. பரபரப்பாக போகக்கூடிய திரைக்கதை உள்ளது. ஆனால் மெய்யழகன் என்ன தப்பு செய்தது. மெதுவாக நீரோடை போல செல்லும் திரைக்கதைதானே, அதற்கும் ஏன் மலையாள ரசிகர்கள் ஆதரவு தரவில்லை?

லப்பர் பந்து வசூலில் பெரும் பகுதி தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ளது. சுமார் 30.75 கோடி ரூபாயை லப்பர் பந்து இங்கு வசூலித்தது. இப்படம் கர்நாடகாவில் ரூ 2.15 கோடி வசூலித்துள்ளது. ஆனால், நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய மலையாள படங்களை உற்பத்தி செய்யும் கேரளாவில் லப்பர் பந்து வெறும் ரூ.20 லட்சம்தான் வசூலித்துள்ளது. அதாவது ஒரு ஹுண்டாய் கிரெட்டா கார் வாங்கும் பண மதிப்புக்குதான் அங்கு மொத்த வசூலே வந்துள்ளது.

பெங்களூர் மற்றும் மைசூரின் சில பகுதிகளை தவிர வேறு எங்கும் பெரிதாக தமிழ் திரைப்படங்களை திரையிடாத மாநிலம் கர்நாடகா. அங்கு லப்பர் பந்துக்கு கிடைத்த வசூல் 2.15 கோடி. மாநிலம் முழுக்க திரையிடும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற கேரளாவில் 20 லட்சம்தான் வசூல். படம் நன்றாக உள்ளது என்று தெரிந்த பிறகும் கேரளாவில் திரையரங்குகளில் காட்சிகளை அதிகரிக்கவில்லை என்பதை இந்த வசூல் நிலவரம் காட்டுகிறது.

இதையெல்லாம் பார்த்த பிறகுதான், தமிழர் ரசிகர்கள் பலரும், இனியாவது திருந்துங்கள் தமிழ் ரசிகர்களே, நம்மூர் படைப்பாளிக்கு ஆதரவு தெரிவியுங்கள். மலையாளத்தில் நல்ல படம் வருகிறது என்று ரைட்அப்களை எழுதி, உங்கள் மேதாவித்தனத்தை காட்டுவதாக நினைத்து, சாதாரண படங்களையும் தூக்கிவிட்டுவிடுகிறீர்கள், ஆனால் அவர்களோ லப்பர் பந்து மாதிரியான, கண்ணை திரையில் இருந்து அகற்ற முடியாத அளவுக்கு திரைக்கதை கொண்ட படத்திற்கே 20 லட்சம்தான் வசூலை பரிசாக தந்துள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் குமுறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+