சென்னைக்கே சர்ப்ரைஸ்! மொத்தமாக 3 லுலு ஹைப்பர் மார்க்கெட்.. அதுவும் இந்த இடத்திலா? குலுங்குது மெட்ரோ
சென்னை: கோவை மக்களை ஆஃபர்களை அள்ளி தெளித்து குஷிப்படுத்திய லுலு ஹப்பர் மார்க்கெட் சென்னையிலும் அமைய இருக்கிறதாம். சென்னையின் இதயம் என்று சொல்லப்படக் கூடிய மூன்று முக்கிய பகுதிகளில் இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள் அமைய இருக்கிறது. எந்தெந்த இடங்களில் அமைய இருக்கிறது? எப்பொது பயன்பாட்டுக்கு வரும்? என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ நகரங்களில் சென்னையும் ஒன்றாக உள்ளது. சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஷாப்பிங் மால்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகள் என சென்னையில் அதிகம் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது சென்னையில் நிறைய ஷாப்பிங் மால்கள் இருக்கின்றன. முக்கியமாக, வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால், ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ, அம்பா ஸ்கைஒன் போன்ற பிரம்மாண்டமான மால்கள் உள்ளன. இந்த மால்கள் ஷாப்பிங் செய்யவும், பொழுதை கழிக்கவும் முக்கிய பகுதிகளாக சென்னைவாசிகளுக்கு உள்ளன.
சென்னையில் லுலு மால்: தற்போது இருக்கும் இந்த மால்களை விட மிகப்பிரம்மாண்டமான முறையில், புதிய மால் அமைப்பதற்கான வேலையை லுலு நிறுவனம் கையில் எடுத்துள்ளது. சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய இடத்தில் லுலு மால் வரப்போவதாக சொல்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க லுலு நிறுவனம் ஹைப்பர் மார்க்கெட்டையும் அமைக்கும் முயற்சியில் உள்ளதாம்..
தற்போது கோயம்புத்தூரில் ஹைப்பர் மார்க்கெட்டை அமைத்திருக்கிறது லுலு நிறுவனம். அவிநாசி சாலையில், லட்சுமி மில்ஸ் வளாகத்தில், லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. இந்த ஹைப்பர் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் தான் தற்போது சென்னையிலும் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகள் அமைக்க முடிவு செய்துள்ளதாம்.
3 இடங்கள் எவை: இது அமையைப்போகும் இடம்தான் ரொம்பவே ஸ்பெஷல்.. அதாவது மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சென்னை சென்டிரல் உள்பட மொத்தம் 3 இடங்களில் இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள் அமைக்கப்பட இருக்கிறது. நெரிசல் மிக்க சென்னை சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளில் லுலு போன்ற நிறுவனத்தின் ஹைப்பர் மார்க்கெட் எங்கே வரும் என தோன்றலாம். அதில்தான் விஷயமே அடங்கியுள்ளது.
சென்டிரல் ரயில் நிலையம்: லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகள் சென்னை சென்டிரல், ஷெனாய் நகர், விம்கோ நகர் ஆகிய மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் வர இருக்கிறதாம். இது தொடர்பாக மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், "எங்களின் ஒப்பந்ததாரர் நிறுவனமான கிரேஸ் சர்வீஸ் நிறுவனம் லுலு குழுமத்துடன் ஹைப்பர் மார்கெட் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஷெனாய் நகர்: சில மெட்ரோ நிலையங்களில் உணவு கடைகள் இருக்கும் நிலையில், ஹைப்பர் மார்க்கெட் அமைப்பது பயணிகள் கூட்டத்தை மேலும் அதிகரிக்க செய்யும். லுலு போன்ற ஷாப்பிங் நிலையங்கள் ஸ்டேஷனிலேயே அமைவது பயணிகள் விரைவாக பொருட்களை வாங்கி செல்ல வசதியாக இருக்கும்" என்றார். ஷெனாய் நகர் மெட்ரோ நிலையத்தில் பேஸ்மண்டில் ஹைபர் மார்க்கெட் வர உள்ளதாம்.
எங்கெங்கு அமைகிறது?: சுமார் 1 லட்சம் சதுர அடியில் இந்த ஹைப்பர் மார்ககெட் வர இருக்கிறது. சென்னை சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கும் பகுதி அருகேயே அமைய இருக்கிறது. 40 ஆயிரம் சதுர அடியில் இது அமையும். விம்கோ நகரில் டெப்போவிற்கு மேல்பகுதியில் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைய இருக்கிறதாம். ஜூலை முதல் வாரத்தில் ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த ஹைப்பர் மார்ககெட்டுகள் திறக்கப்படும் என எதிபார்க்கப்படுகிறதாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications