லுலு மால் போறீங்களா? இதுக்கு பிச்சை எடுக்கலாம்.. சென்னை ஷெனாய் நகர் வீடியோ பார்த்தா அதிர்ச்சியாவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் லுலு மால் திறக்கப்பட்டதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.. ஷாப்பிங் செய்யவும், விதவிதமான உணவுகளை ருசிக்கவும் குடும்பம் குடும்பமாக படையெடுத்தனர். ஆனால், இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகும் சில வீடியோக்கள் வேற லெவலில் பேசப்பட்டு வருகின்றன.. அப்படி என்னதான் நடக்கிறது லுலு மாலில்? இணையத்தில் வைரலாகும் அந்த ரீல்ஸ் வீடியோக்களில் அப்படி என்ன இருக்கிறது?

UAE எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லுலு மால் நிறுவனம், பல நாடுகளில் ஹைப்பர் மார்க்கெட்களை நடத்தி வருகிறது.

Lulu Mall Chennai

லுலு மால் நிறுவனம்

இந்தியாவிலும் கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட பல நகரங்களில் லுலூ அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் கால் பதிக்க முடிவு செய்த இந்த நிறுவனம், அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றபோது தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தமிழகத்தில் முதலில் கோவையில் 2023-ம் வருடம் லுலூ ஹைப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது. வீட்டுக்கு தேவையான பொருட்கள், வெளிநாட்டு தயாரிப்புகள், அரேபிய உணவு வகைகள், ஸ்வீட்ஸ் என ஏகப்பட்ட பொருட்கள் இங்கே கிடைக்கின்றன.

கோவை லட்சுமி மில்

அரேபிய உணவான குபூஸ் கஸ்டமர்கள் கண் முன்னாலேயே தயாரித்து கொடுக்கப்படுகிறது. ஆடு, கோழி, மீன், காடை, முயல், வாத்து என பல வகையான இறைச்சிகளும் கிடைக்கின்றன. பெண்களுக்கான சர்வதேச பியூட்டி பொருட்கள், மேக்கப் போட்டு பார்க்கும் வசதி, பெரிய பார்க்கிங் வசதி என பல சிறப்பம்சங்கள் இருப்பதால் கோவை மக்களிடம் இந்த லுலு ஹைப்பர் மாலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து சென்னையின் ஷெனாய் நகரில் சமீபத்தில் லுலூ ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது. சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த லுலு ஹைப்பர் மால், மெட்ரோ ரயில் நிலையத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

ஹைப்பர் மால் சிறப்புகள்

இந்த மால், திறக்கப்பட்டதிலிருந்தே குடும்பம் குடும்பமாக மக்கள் இங்கே ஷாப்பிங் செய்ய குவிந்து வருகின்றனர்.. பில் போடுவதற்காக இங்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் அளவுக்கு கூட்டமும் காணப்படுகிறது.. சென்னையிலும் லுலுவுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்த நிலையில், இப்போது வெளியாகும் சில ரீல்ஸ் வீடியோக்கள் பேசுபொருளாகியுள்ளன.

குறிப்பாக, லுலுவில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் தொடர்பாக சிலர் குறைகளை சொல்லி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.. பப்ஸ், பாவ் பாஜி உள்ளிட்ட உணவுகள் சூடு ஆறிப்போய் இருப்பதாக சில ரீல்ஸ்களில் காட்டப்படுகிறது. இதனிடையே, "Lulu Mall Parithabangal" என்ற பெயரிலும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

சென்னை ரீல்ஸ் வீடியோ

இப்போது வெளியாகியுள்ள இன்னொரு வீடியோவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சில இளைஞர்கள் லுலுவில் ஷாப்பிங் செய்ய சென்றபோது, கூல்டிரிங்ஸ், கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை வீடியோ எடுத்துள்ளனர்.

அங்கே கூல்டிரிங்ஸ் குடிக்கப்பட்டு காலி டின்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை காட்டுகின்றனர். கேக், பன் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்திருப்பதாகவும், பேரீச்சம்பழம் வைக்கப்பட்டிருந்த டப்பாவும் காலியாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் அப்பட்டமாக காட்டப்படுகிறது..

பல உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த டப்பாக்கள் காலியாக இருப்பதை பார்த்து, "இந்த கேவலமான வேலையை பார்க்குறதுக்கு, போய் பிச்சை எடுக்கலாம்" என்ற கேப்ஷனுடன் இந்த ரீல்ஸ் வீடியோ ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நெட்டிசன்கள் அதிர்ச்சி

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் பலரும் கடுமையான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

"இது விளையாட்டு இல்லை.. ரொம்ப வெட்கக்கேடான விஷயம், சிசிடிவி காட்சிகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என்று சிலர் பதிவிட்டுள்ளனர்..

மேலும் சிலர், "கேரளாவில் இவ்வளவு பிரபலமான லுலூவுக்கு சென்னையில் இப்படியொரு நிலைமையா ? உணவுப் பொருட்களை சாப்பிட்டுவிட்டு காலியாக விட்டு செல்வது அசிங்கமான பழக்கம், இதுபோன்ற செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வீடியோவை போலீசில் தந்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கேரளாவில் லுலு மால் என்றாலே அவ்வளவு நல்ல பெயர் உள்ளபோது, சென்னையில் மட்டும் ஏன் இப்படி? மாலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் ஒட்டுமொத்த லுலு மாலுக்கும் கெட்ட பெயராகிவிடும்" என்றெல்லாம் அக்கறையுடன் பதிவிட்டு வருகிறார்கள்.

கேரளாவில் நல்ல பெயர்

சென்னையை பொறுத்தவரை, மேலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய அங்காடிகளை அமைக்க லுலு குழுமம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற நகரங்களிலும் இதுபோன்ற சர்வதேச தரத்திலான ஷாப்பிங் மால்கள் வர வேண்டும் என்பது அந்தந்த பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்..

இதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதுடன், தமிழக விவசாயிகளின் விளைபொருட்களுக்கும் நல்ல சந்தை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இப்படியாக தமிழகத்தில் லுலு மேலும் பல இடங்களில் வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், "லுலு மால் பரிதாபங்கள்" என்ற பெயரில் இதுபோன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+