லுலு மால்.. ஓஹோ இதுக்குதான் ரஜினி அங்கிட்டு கிளம்பி போனாரா? தேடிவந்த "தங்க மரியாதை".. சர்ப்ரைஸ் லுலு
சென்னை: லுலு மால் ஒரு சர்ப்ரைஸ் ட்வீட் பதிவிட்டுள்ளது. இந்த ட்வீட்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் அபுதாபிக்கு சென்றிருந்தார்.. ஓய்வுக்காக அங்கு சென்றிருந்த ரஜினிகாந்த், லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலியை சந்தித்து பேசியிருந்தார்.

லுலு குழும தலைவரை சந்திப்பதற்காகவே, ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்து சென்றிருந்தார்.. யூசுப் அலி மட்டுமல்லாமல், மற்ற உயர் அதிகாரிகளையும் அப்போது ரஜினி சந்தித்து பேசியிருந்தார்..
ரஜினிகாந்த்: எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்று தெரியவில்லை.. ஆனால், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொன்னார்களே தவிர, இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமே வெளியாகிவில்லை. அதேசமயம், ரஜினியும், யூசுப் அலியும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல்கள் கசிந்தன.
அதேபோல, லுலு குழுமத்தின் சிஓஓ சைஃபி ரூபாவாலாவையும் ரஜினிகாந்த், அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார்.. இவர்களின் சந்திப்புக்கான போட்டோவை, சைஃபி தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்..
அபுதாபி: இப்போது விஷயம் என்னவென்றால், ரஜினியின் இந்த சந்திப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் இந்த கோல்டன் விசா ரஜினிக்கு வழஙகப்பட்டுள்ளது. அந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது கஃலியா அல் முபாரக் ரஜினிகாந்திடம் கோல்டன் விசாவை வழங்கினார்..
இதுகுறித்து, நடிகர் ரஜினிகாந்த் அந்த நிறுவனத்தின் சேர்மனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வீடியோ ஒன்றையும் பேசி வெளியிட்டிருக்கிறார்.

வீடியோ: அந்த வீடியோவில் ரஜினி, "ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.. யுஏஇ அரசுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இந்த விசாரணை எளிதாக்கியதற்காக லுலு குழுமத்தின் தலைவரும், ஏன்னுடைய நண்பருமான யூசுப் அலிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என கூறியிருக்கிறார்.
ரஜினியின் நன்றி தெரிவிக்கும் இந்த வீடியோவை, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் லுலு நிறுவனம் பதிவிட்டுள்ளது.. அதாவது சினிமா பிரமுகர்கள், தொழில் முனைவோர் முதலீட்டார்கள், மாணவர்கள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிப்பதற்காக, கடந்த 2018ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகம் இந்த கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசாக்களை பெறுபவர்கள் 10 வருடங்களுக்கு ஐக்கிய அரசு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்..
விஜய் சேதுபதி: அந்தவகையில், சஞ்சய்தத், ஷாருக்கான், காஜல் அகர்வால், மம்முட்டி, துல்கர் சல்மான் மோகன்லால், மீரா ஜாஸ்மின், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, விக்ரம், யுவன் சங்கர் ராஜா, ஜோதிகா, திரிஷா, பாடகி சித்ரா, பார்த்திபன் போன்றோர் இந்த கோல்டன் விசாக்களை இதற்கு முன்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications