Blood Moon: வானில் தெரியும் 'ரத்த நிலா'! சந்திர கிரகணம் நேரத்தில் கர்ப்பிணிகள் தேங்காய் வைத்திருக்கணுமா
சென்னை: சந்திரகிரகணத்தின்போது நாளை என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். சுமார் 82 நிமிடங்கள் நீடிக்கும் இந்த சந்திரகிரகணம் ரத்த நிலா என அழைக்கப்படுகிறது.

சந்திரகிரகணம் எப்போது?
கிரகணம் தொடக்கம்: இரவு 9:56 PM
முழு கிரகணம் தொடக்கம்: இரவு 10:59 PM
கிரகண உச்சம்: இரவு 11:41 PM
முழு கிரகணம் முடிவு: செப்டம்பர் 8, 2025 அன்று நள்ளிரவு 12:23 AM
கிரகணம் முழுவதுமாக முடிவு: செப்டம்பர் 8, 2025 அன்று அதிகாலை 1:26 AM
கிரகணம் எத்தனை மணி நேரம் நீடிக்கிறது?
இந்த கிரகணம் 82 நிமிடங்கள். அதாவது கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் நீடிக்கும்.
கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?
ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக், அன்டார்டிகா, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் தெரியும்.
இந்தியாவில் கிரகணம் தெரியுமா?
இந்தியாவில் சந்திரகிரகணம் தெளிவாக தெரியும்.
இது என்ன வகையான கிரகணம்?
இது முழு சந்திரகிரகணம், இதை ரத்த நிலா (Blood Moon) என அழைப்பார்கள்.
ஏன் ரத்த நிலா என அழைக்கப்படுகிறது?
சூரியனின் ஒளி படாமல் நிலவை, பூமி மறைக்கும். சூரியனின் ஒளி மறைக்கப்படுவதால் நீல ஒளி சிதறி, நிலவு சிவப்பு மற்றும் ஆரஞ்ச் நிறத்தால் தெரியும்.
சந்திரகிரகணத்தின் போது என்ன செய்யலாம்?
- சந்திரகிரகணத்தின் போது தியானம் செய்யலாம். பஜனை நடத்தலாம்.
- சந்திரனுக்கு பிடித்த மந்திரங்களை சொல்லலாம்.
- கிரகணம் முடிந்ததும் குளித்துவிட வேண்டும்
- கங்கை நீரை கொண்டு பூஜை பொருட்கள் புனிதப்படுத்த வேண்டும். வீடு முழுக்க கங்கை நீரை தெளியுங்கள்
- புனித நூல்களை படிக்கலாம்.
- கர்ப்பிணி பெண்கள் கிரகணம் தொடங்கும் முன் நீர் நிரம்பியிருக்கும் தேங்காயை மடியில் வைத்திருக்க வேண்டும். கிரகணம் முடிந்ததும் ஓடும் நீரில் அந்த தேங்காயை விட்டுவிட வேண்டும். இதனால் எதிர்மறை ஆற்றல் ஓடிவிடும். வயிற்றில் இருக்கும் சிசுவும் பாதுகாப்பாக இருக்கும்.
- நீர், உணவு பொருட்களில் துளசியை போடுங்கள்
சந்திர கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை?
- திருமணம், கிரகபிரவேசம், புதிய கார், பைக் வாங்குதலை செய்யக் கூடாது.
- கிரகணத்தின் போது உணவு தயாரிப்பதோ உணவு உண்பதோ கூடாது.
- கிரகணத்தின் போது உடலுறவு கொள்ளுதல் கூடாது.
- கிரகணத்தின் போது சுவாமி சிலைகளை தொடக் கூடாது
- கோயிலுக்குள் செல்ல கூடாது.
- கத்தி, கத்தரிகோல், ஊசி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கையில் வைத்திருக்கக் கூடாது.
- கிரகணத்தின் போது தூங்கக் கூடாது.
கிரகணத்தின் போது என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதை கொடுத்துள்ளோம். இது சாஸ்திர ரீதியாக சரி என்கிறார்கள். ஆனால் அறிவியல் ரீதியில் கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது, கர்ப்பிணிகள் வெளியே வரக் கூடாது என்பதெல்லாம் கட்டுக்கதைகள்தான் என்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications