சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை அடியுங்கள்.. பாவம் வாயில்லா ஜீவனை விட்டுவிடுங்கள்.. கவிஞர் தாமரை பேஸ்புக் போஸ்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: என்னை அடியுங்கள், வாயில்லா உயிர்களை விட்டுவிடுங்கள் என ஜல்லிக்கட்டை எதிர்த்து கவிஞர் தாமரை குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் சல்லிக்கட்டு தேவையில்லை !

இப்படிச் சொல்லுவதால் எத்தகைய எதிர்ப்பு எழும் என்று எனக்குத் தெரியும். என்னென்ன விதமான வசவுகள் வந்து விழும் என்றும் தெரியும். இருந்தாலும் அப்பாவி விலங்குகளுக்கு வாயில்லை, பேச முடியாது என்பதால் அவற்றுக்காக நான் பேசுகிறேன். என்னை அடியுங்கள், வாயில்லா உயிர்களை விட்டுவிடுங்கள்.

இதுநாள்வரை பாரம்பரியம் / பன்னெடுங்கால வழக்கம் என்பதன் அடிப்படையில் 'சல்லிக்கட்டு' என்னும் 'காளை விளையாட்டு' ஆடப்பட்டிருக்கலாம். ஆனால், விலங்குகளின் உரிமை எனும் பார்வையில் உலகம் விழித்துக் கொண்ட வேளை இது ! இனியும் சல்லிக்கட்டு போன்ற, மனிதன் விலங்குகளை அச்சுறுத்தும் அநாகரீக விளையாட்டு தேவையில்லை.

தொழில்முதலீடுக்கு நாட்டிலேயே தமிழ்நாடுதான் பெஸ்ட்! ஏப்ரல்-டிசம்பர் வரை அதிக முதலீடுகளை ஈர்த்து சாதனைதொழில்முதலீடுக்கு நாட்டிலேயே தமிழ்நாடுதான் பெஸ்ட்! ஏப்ரல்-டிசம்பர் வரை அதிக முதலீடுகளை ஈர்த்து சாதனை

ஆட்டு சண்டை

ஆட்டு சண்டை

சேவல் சண்டை, ஆட்டு சண்டை, நாய்ச்சண்டை,ரேக்ளா பந்தயம், குதிரைப் பந்தயம் உள்ளிட்ட அனைத்து விலங்குவாதை விளையாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விலங்குகள் உயிர் மட்டுமல்ல, உணர்வும் உள்ளவை. அவற்றுக்கு வலி, வேதனை, அச்சம், அதிர்ச்சி, பாசம் அனைத்தும் உண்டு. அவற்றை விளையாட்டுப் பொருளாக்குவது நமக்கு வேண்டுமானால் வேடிக்கையாக இருக்கலாம், அவற்றுக்கு அது நிச்சயம் வாதையே !

விலங்குகள்

விலங்குகள்

எந்த விளையாட்டிலும் இருதரப்பு இருக்கும், இருதரப்புக்கும் விளையாட்டின் விதிமுறைகள் தெரிந்திருக்கும், அவற்றை ஏற்றுக் கொண்டே விளையாட வந்திருப்பார்கள். ஆனால் சல்லிக்கட்டு போன்ற விலங்கு விளையாட்டுகளில் மறுதரப்பான விலங்குகளுக்கு விதிமுறை தெரியாது...அது விளையாட்டு என்றே தெரியாது ! . மறுதரப்பால் ஏற்றுக் கொள்ளப்படாத விளையாட்டை விளையாட்டு என்று சொல்வதே குற்றம் !. அதன் பெயர் வன்முறை !

மெரினா போராட்டம்

மெரினா போராட்டம்

நினைவு தெரிந்தநாள் முதல் நான் விலங்கு-மனிதன் விளையாட்டுகளை எதிர்த்தே வந்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்குமுன் மெரினாவில் நடைபெற்ற 'சல்லிக்கட்டு'ப் புரட்சியின்போதுகூட அதற்கு ஆதரவாக நான் நிற்கவில்லை. புரட்சி செய்ய ஆயிரம் காரணங்கள் இருக்க போயும் போயும் சல்லிக்கட்டை முன்னிறுத்தி சமூகம் திரண்டது வேதனையளித்த நிகழ்வு !

உரக்கக் குரல்

விலங்குரிமைக் குரல்கள் எழும்பி மேல் வரும் இன்றைய சூழ்நிலையில் நான் அவற்றுக்காக உரக்கக் குரல் கொடுக்கிறேன்.

#சல்லிக்கட்டைஎதிர்க்கிறேன்
#IopposeJallikkattu
#AnimalRightsIsNewNorm
#BanAllTypesOfAnimalSports

இவற்றை எதிர்ப்பதால் தமிழர் அடையாளம் இழப்பர் என்பது தவறான பார்வை. தமிழர் அடையாளமாக வேறு ஏராளமான வழக்கங்கள் உள்ளன. அவற்றை வளர்த்தெடுப்போம். உதாரணமாக 'தமிழர் தமிழிலேயே பேசுவது', 'மம்மி டாடியைக் கைவிடுவது'. சல்லிக்கட்டுக்கும் விலங்கு விளையாட்டுக்கும் எதிரான கருத்துள்ளவர்கள் குரலெழுப்புங்கள். நம் குரல் ஓங்கி ஒலித்தால், மெரினா அலையை விடவும் பெரிதாக இருக்கும், விலங்கு சமூகத்தின் வாழ்த்தும் கிடைக்கும் என தாமரை தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Lyricist Thamarai opposes Jallikattu competition as it tortures cattle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X