கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல்.. என் காதலா..காதல் வயது பார்க்குமா? 6-வது பாடல் வெளியீடு
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாடல் தொகுப்பில் என் காதலா! காதல் வயது பார்க்குமா? என்ற 6-வது பாடல் இன்று வெளியிடப்பட்டது.
கவிப்பேரரசு வைரமுத்து நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்களை உருவாக்கி உள்ளார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் முதல் பாடல் ஏப்ரல் 18-ந் தேதி கலைஞர் டிவி மற்றும் இசையருவி சேனல்களில் ஒளிபரப்பானது. ஒவ்வொரு வாரமும் ஒரு பாடல் வீதம், நாட்படு தேறல் என்ற தலைப்பின் கீழ் பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இன்று 6-வது பாடல் என் காதலா! காதல் வயது பார்க்குமா? வெளியிடப்பட்டது.

வைரமுத்துவின் பாடல் வரிகள்:
என் காதலா
காதல் வயது பார்க்குமா?
நானும்
சின்னக் கன்று என்று இன்று
சிந்தை மாறுமா?
வயதால் நம்
வாழ்வு முறியுமா?
வாய் முத்தம்
வயது அறியுமா?
நிலா வெண்ணிலா
வயதில் மூத்ததில்லையா
இருந்தும்
நிலவு சொல்லி இளைய அல்லி
மலர்வதில்லையா?
என்வாழ்வில் தந்தை இல்லையே
தந்தைபோல் கணவன் வேண்டுமே!
ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்ன்பது
காலம் தோறும் மாறுது
வெட்டுக்கிளியின் ரத்தமோ
வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே
விதிவிலக்கும் உள்ளது
ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?
காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!
அறிவழிந்து போனபின்
வயதுவந்து தோன்றுமா?
பொருள் அழிந்து போனபின்
நிழல் கிடந்து வாழுமா?
அறமிருக்கும் வாழ்விலே
முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலே
அறமிருக்கும் இல்லையா?
ஏ.எல். விஜய் இயக்கத்தில் என்.ஆர். ரகுநந்தன் இசையில் ஶ்ரீநிஷா குரலில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications