எடப்பாடி என்ன யோசனையில் இருக்காரு? ஸ்டாலினுக்கு போன உளவு ரிப்போர்ட்.. அடடா.. எல்லாமே நாடகமாமே?
சென்னை; அதிமுக - பாஜக கூட்டணி முறிவு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான சில தகவல்கள் சென்றுள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக தொடர்ந்து சில விசாரணைகளை செய்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக - பாஜக மோதல் காரணமாக அவர்கள் கூட்டணி முறிந்துள்ளது. 2024 லோக்சபா, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடும் என்று என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்பது போல பேசி வருகிறார்.
மோடி வந்தால் செல்லவில்லை; இந்த நிலையில்தான் தற்போது திருச்சி பயணத்திலும் மோடியுடன் எடப்பாடி இல்லை. மோடி தமிழ்நாடு வந்த நிலையில் எடப்பாடி அவரை பார்க்கவில்லை. முன்பு கூட்டணியில் இருந்த மரியாதைக்கு கூட எடப்பாடி மோடியை நேரில் சென்று பார்க்கவில்லை.
பாஜக நிலைப்பாடு: ஆனால் பாஜக இப்படி உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. பாஜக இன்னமும் தனியாக கூட்டணி அமைப்போம். பாஜக தலைமையில் கூட்டணி அமைப்போம் என்றெல்லாம் சொல்லவில்லை. மாறாக 9 தொகுதியில் கவனம் செலுத்த போகிறோம். 9 தொகுதிகளில் போட்டியிட போகிறோம் என்பதை மட்டும் பாஜக அறிவித்து உள்ளது. இதற்காக அங்கே தேர்தல் பணிகளை செய்யவும் பாஜக களமிறங்கி உள்ளது.

மற்றபடி அதிமுகவுடன் கூட்டணி பற்றி டெல்லி முடிவு எடுக்கும். டெல்லி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். அங்கே பேச்சுவார்த்தை போய்கொண்டு இருக்கிறது. 5 மாநில தேர்தலில் பாஜக பிசியாக இருக்கிறது. அந்த தேர்தல் முடிந்த பின்பே பாஜக தமிழ்நாடு பக்கம் கவனம் செலுத்தும். அதுவரை இந்த விவகாரத்தில் எந்த மாற்றமும் வராது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.
முக்கியமாக தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி பற்றி சமீபத்தில் பி எல் சந்தோஷ் ஆலோசனை செய்தார். அதில் 5 மாவட்ட தேர்தலுக்கு பின் நாங்கள் கூட்டணி பற்றி முடிவு எடுப்போம். அதுவரை அதிமுகவை விமர்சனம் செய்ய வேண்டாம். கட்சியை பலப்படுத்துவதை பற்றி யோசியுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

நாடகம்: இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான சில தகவல்கள் சென்றுள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக முக்கியமான சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கூட்டணி முறிவு காரணமாக எடப்பாடி பழனிசாமி.. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் பக்கம் வரும் என்று நினைத்தார். முக்கியமாக முஸ்லீம் லீக், விசிக, காங்கிரஸ் போன்றவை தங்கள் பக்கம் வரும். திமுகவின் கூட்டணி உடையும் என்று எடப்பாடி நினைத்தார். ஆனால் இதுவரை இப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான்.. எடப்பாடி திமுக கூட்டணியை உடைக்க காய் நகர்த்தி வருகிறார் என்ற உளவு ரிப்போர்ட் ஒன்று ஸ்டாலினுக்கு சென்றுள்ளதாம்.
உளவுத்துறை மட்டுமின்றி அதிமுகவில் ஸ்டாலினுக்கு நெருக்கமாக உள்ள ஒரு தலைவர் ஒருவரும் இந்த தகவலை ஸ்டாலினிடம் கூறி இருக்கிறாராம். இப்படி உங்க கூட்டணியை எடப்பாடி முறிக்க பார்க்கிறார் என்ற தகவலை சொல்லி இருக்கிறாராம். இதனால் எடப்பாடியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications