கருணாநிதி, அண்ணா, ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்ய முடியாதது.. மு.க ஸ்டாலின் செய்த பெரிய அரசியல் சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலில் இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் செய்ய முடியாத மிகப்பெரிய அரசியல் சாதனையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினின் சாதனை பற்றி பார்க்கும் முன் கடந்த லோக்சபா தேர்தல்களில் தமிழ்நாடு எப்படி வாக்களித்து உள்ளது என்று பார்க்கலாம்.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politics

இதுவரை வந்த முடிவுகள்;

(1951) மொத்த இடங்கள் 75 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி

(1957) மொத்த இடங்கள் 41 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி

(1962) மொத்த இடங்கள் 41 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி

(1967) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 25 இடங்களில் வெற்றி

(1971) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 23 இடங்களில் வெற்றி

(1977) மொத்த இடங்கள் 39 களில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 17 இடங்களில் வெற்றி

(1980) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி

(1984) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 25 இடங்களில் வெற்றி

(1989) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 27 இடங்களில் வெற்றி

(1991) மொத்த இடங்கள் 39 களில் இந்திய தேசிய காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி

(1996) மொத்த இடங்கள் 39 களில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) 20 இடங்களில் வெற்றி

(1998) மொத்த இடங்கள் 39 களில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 18 இடங்களில் வெற்றி

(1999) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 12 இடங்களில் வெற்றி

(2004) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்றக் கழகம் 16 இடங்களில் வெற்றி

(2009) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்ற கழகம் 18 இடங்களில் வெற்றி

(2014) மொத்த இடங்கள் 39 களில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37 இடங்களில் வெற்றி

(2019) மொத்த இடங்கள் 39 களில் திராவிட முன்னேற்ற கழகம் 24 இடங்களில் வெற்றி

வரலாறு: மேற்கண்ட தேர்தல் வரலாற்றில் எந்த தேர்தலிலும் முழு இடங்கள் வென்ற கட்சி அடுத்த முறை அதே அளவு இடங்களை தக்க வைத்து இல்லை.

அதாவது கிளீன் ஸ்வீப் செய்யும் கட்சி மீண்டும் அடுத்த தேர்தலில் அப்படி வென்றதே இல்லை. கருணாநிதி, எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இந்த சாதனையை செய்தது இல்லை.

ஸ்டாலின் சாதனை: ஆனால் அந்த சாதனையை ஸ்டாலின் செய்துள்ளார். கடந்த முறை தமிழ்நாடு - புதுவை சேர்ந்து 39 இடங்களில் வென்றது திமுக. இந்த முறை 40 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம் இவர்கள் செய்யாத இரட்டை கிளீன் ஸ்வீப் சாதனையை செய்துள்ளார்

தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி உட்பட 40 இடங்களில் 40லும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் சில இடங்களில் வெற்றியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. பாஜக தென்சென்னை, நெல்லை தவிர எங்கும் கடும் போட்டி கொடுக்கவில்லை. எந்த தொகுதியில் வெற்றிபெறவில்லை.

18-வது லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக நெல்லையில் முன்னிலை வகித்த நிலையில் அங்கே பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் வென்ற ஒரு இடத்தை.. அதாவது தேனியையும் இழந்து அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது.
.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+