எப்படி இருக்கீங்க.. என்னாச்சு.. கமலை திடீர் என்று சந்தித்த ஸ்டாலின்.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    MK Stalin Meet Kamal Hassan | கமலை திடீர் என்று சந்தித்த ஸ்டாலின்.. என்ன நடக்கிறது?

    சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சந்திப்பு நடத்தினார்.

    சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சந்திப்பு நடத்தினார்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சினிமா, அரசியல் என்று மிகவும் பிசியாக இருக்கிறார். அதேபோல் டிவி நிகழ்ச்சிகளிலும் இப்போது அடிக்கடி கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

    இந்த நிலையில் தற்போது அவர் அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டு உள்ளார். அவருக்கு காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    விபத்து கால்

    விபத்து கால்

    கடந்த 2016ம் ஆண்டின் போது கமலுக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கால் எலும்பு முறிந்து சிறிய இடைவெளி உருவானது. இது குணமாகும்வரை அங்கு டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. பின் கமல்ஹாசன் அதோடுதான் செயல்பட்டு வந்தார்.

    உடைந்த எலும்பு

    உடைந்த எலும்பு

    இந்த நிலையில் அவரின் உடைந்த எலும்பு வளர்ந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் அவருக்கு இந்த கம்பியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போலோ

    அப்போலோ

    நேற்று கமலுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் இன்று மநீம தலைவர் கமலுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்று கமலை ஸ்டாலின் சந்தித்தார்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    கமலை சந்தித்த ஸ்டாலின் அவரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். கால் எப்படி இருக்கிறது. அறுவை சிகிச்சை எப்படி நடந்தது என்பது குறித்தும் விசாரித்தார். ஸ்டாலின் உடன் துரைமுருகன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    அதேபோல் இவர்கள் இருவரும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பேசி இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன் ரஜினியுடன் சேர தயார் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஸ்டாலின் கமல்ஹாசன் சந்திப்பு நடந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+