எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி.. பிள்ளையார் சுழி போட்ட ஸ்டாலின்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்து இருப்பது தேசிய அரசியலில் மிக முக்கியமான கருத்தாக பார்க்கப்படுகிறது.
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்து இருப்பது தேசிய அரசியலில் மிக முக்கியமான கருத்தாக பார்க்கப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. இந்த விழா பிரம்மாண்டமாக நடந்தது.
இதையடுத்து ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். ஸ்டாலினின் பேச்சு அவரது அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான பேச்சாக பார்க்கப்படுகிறது .

மறக்க முடியாத நாள்
ஸ்டாலின் தனது பேச்சில், தமிழர்களின் வாழ்வில் இன்று மறக்க முடியாத நாள்.கருணாநிதி மறையவில்லை என்றே உணர்கிறேன். கருணாநிதி எங்கும் செல்லவில்லை, லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் நிலைத்திருக்கிறார்.நாட்டில் ஜனநாயகத்தையும், மக்களையும் காக்கவே ஒன்றிணைந்துள்ளோம்.

கஜா புயல் மோடி
கஜா புயல் பாதிப்பை பார்க்க பிரதமர் மோடி நேரில் வராதது ஏன்?. தமிழகம் எதிர்த்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.வெளிநாட்டில் மரணம் நடந்தால் பிரதமர் டுவிட் செய்கிறார் டெல்டாவில் மரணம் அடைந்தால் இரங்கல் தெரிவிப்பதில்லை

மோடி அரசை வீழ்த்த வேண்டும்
அதனால் தான் மோடி அரசை வீழ்த்த வேண்டும்.வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம்.மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு கொண்டுருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.

வேட்பாளராக முன்மொழிந்தார்
ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும்.ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சி தருக.

முதல் ஆள்
எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஸசேர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைக்க பேசி வருகிறது. இந்த கூட்டணி கிட்டத்தட்ட 90 சதவிகிதம் வடிவம் பெற்றுவிட்டது. ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று எல்லோரும் விவாதித்துக் கொண்டு இருக்கும் போது ஸ்டாலின் முதல் ஆளாகி ராகுல் பெயரை முன்மொழிந்து இருக்கிறார்.

மற்ற கட்சிக்கு அழைப்பு
அதோடு மேடையிலேயே கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவரின் இந்த அழைத்து தேசிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்த சந்திர பாபு நாயுடு கூட இன்னும் பிரதமர் வேட்பாளர் பற்றி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
இந்த விழா பெரிய வைரலாகி இருப்பதால் தேசிய அரசியலில் ஸ்டாலினின் பேச்சு பெரிய விவாதத்தை ஏற்படுத்த போகிறது. இனிதான் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நிஜமாக நடக்க போகிறது. அதற்கான பிள்ளையால் சுழி தமிழகத்தில் இருந்து போடப்பட்டு இருக்கிறது.
-
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications