உங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்
சென்னை : ஸ்டாலின் வேல் எடுத்ததை அதிமுக-வினர் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், அது சூரசம்ஹாரத்திற்கு தான் என விளக்கம் அளித்துள்ளார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.
திருத்தணியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, வெள்ளி வேல் ஒன்று கட்சியினரால் பரிசாக வழங்கப்பட்டது. கையில் வேலுடன் நிற்கும் ஸ்டாலினின் போடோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதிமுக, பாஜக கிண்டல் :
இது பற்றி கோவை பிரசாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேல் தூக்கினாலும் கடவுள் ஸ்டாலினுக்கு வரம் தர மாட்டார் என்றார். அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், தேர்தல் வந்தால் ஸ்டாலின் வேல் குத்திக் கொண்டு கூட ஆடுவார் என்றார். பா.ஜ., மாநில தலைவர் முருகனோ, ஸ்டாலினையே வேல் தூக்க வைத்தது தான் பாஜக.,வின் வேல் யாத்திரையின் வெற்றி என்றார்.

துரைமுருகன் விளக்கம் :
இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஸ்டாலின் வேல் எடுத்தது சம்ஹாரத்திற்கு. அதிமுக-வை சூரசம்ஹாரம் செய்யத்தான் வேல் எடுத்துள்ளார் என புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

காங்கிரசுக்கு பாராட்டு :
மேலும், இப்போதாவது தனித்து பிரச்சாரம் செய்வதாக முடிவெடுத்ததற்கு காங்கிரசுக்கு எனது பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.

கூட்டணிக்கு அழைப்பு :
திமுக கூட்டணிக்கு புதி கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை என புதிய கட்சிகளுக்கும் மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார் துரைமுருகன்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்












Click it and Unblock the Notifications