சாக்ஷிக்கு தமிழில் கெட்ட வார்த்தை தெரியும்.. ஆனா எனக்குத்தான் தெரியாது.. தல தோனி இப்படி சொல்லிட்டாரே
சென்னை: தனது மனைவி சாக்ஷிக்கு தமிழில் ஒரு கெட்ட வார்த்தைக் கூட கற்றுக் கொடுத்தது கிடையாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
மஞ்சள் படை தலைவன் தோனிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். அவரை பாரப்பதற்காகவே ஆயிரக்கணக்கில் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு மைதானத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தோனியை ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்வார்கள்.
தோனி களமிறக்கப்பட்டால் ஆட்டத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதுவார் என்ற பேச்சு இருக்கிறது. அது போல் தொடர்ந்து ஐபிஎல் கோப்பையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே பெற்று வருகிறது.

அண்மையில் நடந்த ஐபிஎல் தொடரில் கூட கடைசி நேரத்தில் 2 பால்களில் 10 ரன்கள் எடுத்தால் மட்டுமே சிஎஸ்கேவுக்கு வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது தோனி காரிடாரில் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஜடேஜா பவுண்டரியையும் சிக்ஸரையும் விளாசினார்.
கூட்டத்தினர் சப்தத்தை கேட்ட தோனி ஓடி சென்று ஜடேஜாவை அப்படியே தூக்கிக் கொண்டார். இப்படி கிரிக்கெட்டில் சாதனை படைத்த தோனி சினிமா துறையிலும் களமிறங்கியுள்ளார். தோனி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் எல்ஜிஎம் எனப்படும் Lets Gets Married எனும் படத்தை தயாரித்துள்ளார்.
அறிமுக இயக்குநரான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு, தொகுப்பாளர் விஜய், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடிப்பில் இந்த படம் உருவாகியிருக்கிறது. காதல் வயப்பட்டு திருமணத்தில் முடியவுள்ள நிலையில் நடிகர் ஹரீஷுக்கும் இவானாவுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதையடுத்து ஹரீஷின் தாயை ஒரு டிரிப்பிற்கு இவானா அழைத்து செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. நகைச்சுவையான படமாக இது உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் மனைவி சாக்ஷியுடன் தோனி கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டார்.
அப்போது தோனி பேசுகையில் சென்னையில்தான் முதல் டெஸ்ட் போட்டி விளையாடினேன். அதிக டெஸ்ட் போட்டி ரன்களை எடுத்ததும் சென்னையில்தான். சென்னை மக்கள் என்னை எப்போதோ தத்தெடுத்துவிட்டார்கள். எனது முதல் படமும் தமிழில் வெளியாகவுள்ளது. அது போல் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் சென்னையில்தான் நடக்கிறது.
படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு முறையாக வழங்கப்பட வேண்டும் என கூறியிருந்தேன். படப்பிடிப்பில் கதையில் நான் எந்த தலையீடும் செய்யவில்லை. படம் முடிந்தவுடன் எனக்கு ஒரு முறை போட்டுக் காட்டினால் போதும். எனது மனைவி சாக்ஷிக்கு தமிழில் ஒரு கெட்ட வார்த்தை கூட நான் கற்று கொடுத்தது கிடையாது.
ஆனால் அவருக்கு தமிழில் கெட்ட வார்த்தைகள் எல்லாமே தெரியும். ஆனால் எனக்கு தமிழில் கெட்ட வார்த்தைகள் தெரியாது. ஆனால் மற்ற மொழிகளில் தெரியும். சென்னையில் எனக்கு கிடைக்கும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சென்னை எனக்கு மிகவும் முக்கியமான நகரம். இவ்வாறு தோனி தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications