சார்பட்டா பரம்பரையில் வரும் டான்ஸிங் ரோஸ்தான் ஜெயக்குமார்.. மா சுப்பிரமணியன் கிண்டல்!
சென்னை: சார்பட்டா பரம்பரையில் வரும் டான்சிங் ரோஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என சமூகவலைதளங்களில் பரவி வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஆட்சியில் தரமற்ற முகக் கவசங்களை வழங்கியது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டை நானும் பார்த்தேன். தற்போது சார்பட்டா திரைப்படத்தின் விடுபட்ட காட்சிகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஜெயக்குமாரின் குத்துச்சண்டை
அதில் ஜெயக்குமாரே குத்துச்சண்டை போடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் தான் டான்சிங் ரோஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த காட்சியையும் பாருங்கள் என்று கிண்டலாக பதிலளித்துவிட்டு புறப்பட்டார். இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை என்ற படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

திமுக ஆதரவாளர் பசுபதி
இதில் திமுக ஆதரவாளராக நடிகர் பசுபதி நடித்துள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆரை பற்றி ஒரு சுவர் விளம்பரமும் இடம்பெற்றிருக்கும். எனவே இது திமுகவுக்கு ஆதரவான படம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்.

விளையாட்டுத் துறை மீது எம்ஜிஆருக்கு ஈடுபாடு
எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதது போல் அந்த படத்தில் காட்டியுள்ளார்கள். திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாப்பிடியாய் கைகொண்டவர் எம்ஜிஆர். மான் கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்துச் சண்டை, குதிரையேற்றம் உள்ளிட்ட விளையாட்டுகளின் வீரராகவே ஒவ்வொரு படத்தில் எம்ஜிஆர் தன்னை வெளிப்படுத்தியிருப்பார்.

எம்ஜிஆருக்கு குத்துச் சண்டை
குத்துச் சண்டை மீது எம்ஜிஆருக்கு நிறைய ஆர்வம். ஆனால் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மதிக்கப்பட்டது போலவும் எம்ஜிஆர் அவர்களை கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications