ஹாய் பொண்டாட்டி.. வீடியோவில் பங்கமாய் கலாய்த்த குரேஷி! ஒரே வரியில் பதிலளித்த மாதம்பட்டி ரங்கராஜ்!
சென்னை: சமூக வலைதளங்கள் முழுவதும் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த பதிவுகளை தான் அதிகம் காண முடிகிறது. முதல் மனைவி இருக்கும் போதே ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பியதாக வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் ஜாய் கிரிசில்டா. இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை கலாய்ப்பது போல குக் வித் கோமாளி புகழ் குரேஷி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
கோவை மாதம்பட்டியைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரான ரங்கராஜ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுகிறார். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்களின் இல்ல நிகழ்ச்சிகளில் சமையல் ஆர்டர் எடுத்து அதனை பிரம்மாண்டமாக செய்து வருபவர் ரங்கராஜ்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சர் எல். முருகனின் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் விருந்தளித்து இருந்தார். அதற்கு முன்னதாக மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட சில படங்களை நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ்
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருக்கும் அவர் அடுத்தடுத்து இரு திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சுருதி என்பவர் உடன் திருமணம் ஆகி அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் முதல் மனைவியை பிரிந்ததாக கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
ஜாய் கிரிசில்டா
தற்போது ஜாய் கிரிசில்டா ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் அவரைப் பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கர்ப்பமாக்கி தற்போது ஏமாற்றி விட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும் அவரை குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
Husband (aka) #RahaRangaraj Appa-வின் Alaparaigal 🙈 @MadhampattyRR #madhampattyrangaraj #chefmadhampatty #chefmadhampattyrangaraj
— Joy Crizildaa (@joy_stylist) August 31, 2025
A man that can betray the woman who carried his child will betray anyone
Read that again…. pic.twitter.com/0mItPCB9Uc
குரேஷி
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பொண்டாட்டி என கூப்பிட்டு பேசியதாக வீடியோ ஒன்றை ஜாய் கிரிசில்டா இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் தான் எழுந்தது, குளித்தது, சாப்பிட்டது, வேலைக்கு செல்வது என பல விஷயங்களை பற்றி மாதம்பட்டி ரங்கராஜ் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை கலாய்ப்பது போல குக் வித் கோமாளி புகழ் குரேஷி தனது மனைவிக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் பதில்
அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ் போலவே பேசி இருக்கும் குரேஷி மலையாளத்தில் தான் எழுந்து விட்டதாகவும் நிகழ்ச்சிக்கு தயாராகி விட்டதாகவும் சாப்பிட்டதாகவும் பேசி இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்துதான் குரேஷி இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் என கூறுகின்றனர் ரசிகர்கள். ஆனால் அதே வீடியோவில் பதில் அளித்து இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ், ரொமான்ஸ் பத்தலடா. 2 வாரம் என்கிட்ட ட்ரெய்னிங் வாடா" எனக் கலகலப்பாகக் கூறியிருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்துதான் குரேஷி வீடியோ போட்டு இருந்தாலும் அதிலும் அவர் ஜாலியாக கமெண்ட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications