வாயும் வயிறுமாக 2வது மனைவி.. கோர்ட் படியேறப் போன முதல் மனைவி! மாட்டிக்கிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜைச் சுற்றிய சர்ச்சைக்குரிய வளையம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவதாக ஜாய் கிரிசில்டா என்பவரைத் திருமணம் செய்து கொண்டதாகப் புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது அவர், மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் கொடுத்திருக்கிறார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவைப் பிரிந்து இருந்ததாகவும், அவர் வெளியிட்டது பழைய புகைப்படங்கள் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் மிகப் பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு விவிஐபிகள் இல்ல நிகழ்ச்சிகளில் சமையல் செய்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல் திரையுலகிலும் சின்னத்திரை உலகிலும் கால் பதித்தவர். மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

madhampatty Rangaraj

மாதம்பட்டி ரங்கராஜ்

இந்த நிலையில் தான் அவரைச் சுற்றிய திருமண சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கின்றன. மாதம்பட்டி ரங்கராஜுக்குச் சுருதி என்பவருடன் திருமணம் ஆகி இரு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவர் மாதம்பட்டி ரங்கராஜுடன் தனக்குத் திருமணம் நடைபெற்றதாகப் புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்தார்.

ஜாய் கிரிசில்டா

மேலும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜுடன் தான் சுற்றித்திரிந்த புகைப்படங்களையும் அடுத்தடுத்து வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார் ஜாய் கிரிசில்டா. இந்த நிலையில் முதல் மனைவியை ரங்கராஜ் பிரிந்துவிட்டதாகவும் தற்போது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது வரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

இரண்டாவது திருமணம்

இதற்கிடையே சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் கலந்துகொண்டார். இதனால் அவர் யாருடன் இருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தான் நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் மீது பரபரப்பு புகார் அளித்தார் ஜாய் கிரிசில்டா. அதில் இரு ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு திருமணம் நடைபெற்றதாகவும், தற்போது தான் ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி விட்டார். முதல் மனைவியைப் பிரிந்து விட்டதாகவே கூறி தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி இருப்பது சின்னத்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜாய் கிரிசில்டா புகார்

இது ஒருபுறம் இருக்க, மாதம்பட்டி ரங்கராஜ் 5 மாதங்களுக்கு முன்பே, ஜாய் கிரிசில்டாவைப் பிரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவில் ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்ட நிலையில், முதல் மாத கர்ப்பமாக இருப்பதாக ஜாய் கிரிசில்டா அவரிடம் கூறியிருக்கிறார். தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என மாதம்பட்டி ரங்கராஜ் கூறியதாகவும், அதற்கு ஜாய் ஒப்புக்கொள்ளாததால் அவரைப் பிரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் ஐந்து மாதங்களுக்குப் பிறகு தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஜாய் என்கின்றனர்.

முதல் மனைவி

மேலும் முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் தனக்கு சட்டரீதியான சிக்கல் எழும் என்பதாலேயே தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியுடன் வசித்து வருவதாகச் சொல்கின்றனர். மாதம்பட்டி ரங்கராஜ் உடனான உறவு குறித்து ஜாய் கிரிசில்டா மட்டுமே அடுத்தடுத்து சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில் இதுவரை முதல் மனைவியான சுருதி, மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+