ஜிம் இல்லை.. வெறும் சாப்பாட்டை மட்டுமே வைத்து உடல் எடையை குறைத்த மாதவன்.. இது எப்படி சாத்தியம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவரான மாதவன், தனது கேரக்டருக்கு ஏற்றபடி உடல் எடையை மாற்றுவதில் வல்லவர்.! இதற்கிடையே அவர் முன்பு அளித்திருந்த ஒரு பேட்டியில் ஜிம் செல்லாமல் உடல் எடையை குறைத்தது தொடர்பாக பேசியிருந்தார். இதை எப்படி சாதித்தார் என்பதை அவர் விளக்கியிருந்தார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

நடிகர் மாதவன் தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை மாற்றி அமைப்பதில் பலமுறை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். குறிப்பாக, 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படத்துக்காக உடல் எடையை அதிகரித்த அவர், பின்னர் 21 நாட்களில் உடல் எடையை குறைத்திருந்தார்.

Madhavan cinema diet

முதல்முறை இல்லை

நடிகர் மாதவன் இதை செய்வது இது முதல்முறை இல்லை.. 2017ஆம் ஆண்டு வெளியான 'விக்ரம் வேதா' படத்துக்காகவும் அவர் கடுமையாக உடல் எடையை மாற்றி இருந்தார். விஜய் சேதுபதி உடன் நடிகர் மாதவன் நடித்திருந்த 'விக்ரம் வேதா' படத்தில் மாதவன் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார். இதனால் அவர் கட்டுக்கோப்பாக தோன்ற வேண்டி இருந்தது.

அந்த கேரக்டருக்கு தான் அவர் ஜிம் எதற்கும் செல்லாமல் உடல் எடையை குறைத்திருந்தார். கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றிய அவர், ஜிம்முக்கு கூட செல்லவில்லையாம். இதை அவரே நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

ரகசியம் இதுதான்

'விக்ரம் வேதா' படத்துக்காக தான் பின்பற்றிய உணவு முறை குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாதவன் கூறுகையில், "எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் இந்த உடலமைப்பை என்னால் பெற முடிந்ததில் மகிழ்ச்சி தான். இதற்காக நான் ஒரு டயர்ட் உணவை தயாரித்தேன். அந்த ரகசிய உணவு டயர்ட்டை மட்டுமே பின்பற்றினேன்.

இதன் காரணமாகவே எனனால் உடல் எடையை குறைக்க முடிந்தது. மாலை 6 மணிக்கு பிறகு நான் எதையும் சாப்பிடுவதில்லை. மேலும், இரண்டு உணவுகளுக்கு இடையில் குறைந்தது 5.5 மணி நேர இடைவெளி இருப்பதை உறுதி செய்துகொள்வேன்" என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே, 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படத்துக்காக உடல் எடையை அதிகரித்த பிறகு, மீண்டும் எடையை குறைத்தது குறித்தும் மாதவன் பேசியுள்ளார். மற்றொரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதை விரிவாக விளக்கியிருந்தார்.

மென்று சாப்பிட வேண்டும்

அதில் மாதவன், "நான் இடைவெளி விட்டு உண்ணும் Intermittent fasting முறையை பின்பற்றினேன். மேலும், ஒவ்வொரு முறை உணவை சாப்பிடும்போதும், 45 முதல் 60 முறை நன்றாக மென்று சாப்பிடுவது, தண்ணீரை பொறுமையாக குடிப்பது போன்ற முறைகளை பின்பற்றினேன். இரவு 6.45 மணிக்கு டின்னர் எடுத்து கொள்வேன். அதன் பிறகு சாப்பிட மாட்டேன். மேலும், மாலை 3 மணிக்கு பிறகு சமைக்கப்படாத உணவை சாப்பிடுவதில்லை. அதிகாலையில் நீண்ட நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். இரவில் ஆழ்ந்த தூக்கம் அவசியம். தூங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே டிவி, மொபைலை ஆஃப் செய்துவிடுவேன்.

முக்கியம்

மேலும், நிறைய திரவ உணவுகளை எடுத்துக்கொள்வேன். அதிக அளவில் பச்சை காய்கறிகளையும், உடலால் எளிதில் செரிமானம் செய்யக்கூடிய ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிடுவேன். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவேன்" என்று அவர் கூறியிருந்தார். அவரது இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. அதாவது உடல் எடையை குறைக்க மணிக்கணக்கில் ஜிம்மில் இருப்பதை விட என்ன சாப்பிடுகிறோம்.. எப்படி சாப்பிடுகிறோம்.. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே முக்கியமானதாக இருப்பதையே இது காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+