"விருப்பமனுவில் 3 தொகுதிகளை கேட்டுள்ளேன்!" டிகேஎஸ் இளங்கோவன் மகள் மாதவி! கணவர் யார் தெரியுமா?
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 3 தொகுதிகளுக்கு விருப்பமனுவை கொடுத்துள்ளார் மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவனின் மகளும், நடிகர் ஜான் விஜய்யின் மனைவியுமான மாதவி!
இதுகுறித்து டிகேஎஸ் இளங்கோவனின் மகள் மாதவி கூறியிருப்பதாவது: நான் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமனு கொடுத்துள்ளேன். நான் போட்டியிட மனு கொடுத்தது இதுதான் முதல் முறை! 3 தொகுதிகளில் போட்டியிட கேட்டுள்ளேன்.

3 தொகுதிகளுமே எனது மனதுக்கு நெருக்கமானவை ஆகும். அந்த 3 இல் எது கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். எனது தந்தை இளங்கோவன் நீண்ட காலமாக திமுகவில் இருந்து வருகிறார்.
கட்சியில் நான் எனது பணிகளை ஆற்றுவதற்கான வாய்ப்பாக கருதுகிறேன். அப்பா எப்போதும் சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டார். நான் போட்டியிடும் தொகுதிகள் எல்லாம் சென்னையில்தான்!
வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 பகுதிகளில் இருந்து ஒவ்வொரு தொகுதிகளை கேட்டுள்ளேன். எனக்கு முதலில் இருந்தே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. எல்லாருக்கும் ஆசை இருக்கும்தானே!

நான் ஆசையாக இருப்பதால் தேர்தலில் போட்டியிடுவதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. அதனால் இத்தனை காலமாக சில வேலைகளை செய்து வந்தேன். என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். இப்போது மக்களுக்கு சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் இப்போது போட்டியிட விரும்புகிறேன்.
நான் விருப்பமனு கொடுத்த விஷயம் அப்பாவுக்கு தெரியும். எங்களை அப்பா செல்லமாக வளர்க்கவில்லை. எதுவாக இருந்தாலும் நாங்களே முட்டி மோதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பார். எங்களை கைபிடித்து எங்கேயும் அழைத்துச் சென்றதில்லை. திறமை இருந்தால் முன்னுக்கு வரலாம் என்பார்.
இப்போதுகூட நானே முயற்சி செய்து எனக்கு நல்லது நடந்தால் அப்பா மிகவும் சந்தோஷப்படுவார். நான் அரசியலுக்கு வருவதற்கு என் கணவர் ஜான் விஜய், எனது 12 வயது மகன் ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தனர். அதனால் விருப்பமனு அளித்துள்ளேன் என மாதவி தெரிவித்தார்.
திமுக மூத்த தலைவராக இருக்கும் டிகேஎஸ் இளங்கோவன், கட்சியின் அமைப்புச் செயலாளர், செய்தித் தொடர்பாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார். இவர் முன்னாள் எம்பி டி.கே. சீனிவாசனின் மகனாவார். திமுகவில் லோக்சபா, ராஜ்யசபா எம்பி பதவிகளை வகித்தவர்.
இவரது மகள் மாதவியை நடிகர் ஜான் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். சென்னையில் வளர்ந்தார், லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தவர். ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய போதுதான் மாதவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் "ஓரம்போ", "தில்லாங்கடி", "ராவணன்", "மௌன குரு", "சார்பட்டா பரம்பரை","சலார்", "பாட்டில் ராதா", "வணங்கான்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். "சார்பட்டா பரம்பரை" படத்தில் அவரது டாடி ரோல் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications