ஒய் ஜி மகேந்திரனின் மகள் பாஜக மதுவந்தியின் வீடு ஏலம்.. ரூ 30 லட்சம் பொருட்களை மீட்டு தர புகார்
சென்னை: நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தியின் வீடு ஏலம் விடப்பட்ட நிலையில் அவரது வீட்டில் இருந்த பொருட்களை மீட்டு தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுவந்தி பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாங்கும் போது பணம் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் இந்துஜா லேலாண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ 1.20 கோடி கடன் வாங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் வட்டியை முறையாக செலுத்திய மதுவந்தி, பின்னர் வட்டி செலுத்துவதை நிறுத்திவிட்டார். மதுவந்தி வாங்கிய கடன், அதற்கான வட்டி எல்லாம் சேர்த்து ரூ 1.21 கோடி ஆனது. இதை மதுவந்தி கட்டத் தவறியதாக தெரிதிறது. இதையடுத்து நடையாய் நடந்து பார்த்த இந்துஜா நிறுவனம் இறுதியில் நீதிமன்றத்தை நாடியது.

ஆழ்வார்பேட்டை
இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் மதுவந்திக்கு சொந்தமான வீட்டை பூட்டி சீல் வைக்க சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் இந்துஜா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வினோத்குமார் தேனாம்பேட்டை போலீஸர் முன்னிலையில் கடந்த 2021 ஆம் அண்டு அக்டோபர் 13ஆம் தேதி மதுவந்தியின் வீட்டை சீல் வைத்தனர்.

இந்துஜா நிறுவனம்
வீட்டின் சாவியை இந்துஜா நிறுவன மண்டல மேலாளர் உமாசங்கரிடம் ஒப்படைத்தனர். அப்போது மதுவந்தி அந்த அதிகாரிகளிடம் சார் ப்ளீஸ் சீல் வைக்காதீர்கள் என எத்தனையோ முறை கெஞ்சி பார்த்தார். ஆனால் அதிகாரிகள் கேட்கவில்லை. இந்த நிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வீட்டில் மதுவந்தியின் பொருட்களை ஒரு மாதத்திற்குள் எடுக்க நோட்டீஸ் கொடுத்தனர்.

மதுவந்தியின் வீடு ஏலம்
ஆனால் இதுவரை தனது பொருட்களை அவர் எடுக்கவே இல்லை. இதனால் இந்துஜா நிறுவனம் மதுவந்தியின் பொருட்களை அவருக்கு சொந்தமான இடத்தில் வைத்துள்ளனர். அந்த வீட்டை பைனான்ஸ் நிறுவனம் ஏலம் மூலம் கடந்த 14 ஆம் தேதி மற்றொருவருக்கு விற்றுவிட்டதாக தெரிகிறது. இந்த தகவல் மதுவந்திக்கு தெரியவந்தது. இந்துஜா நிறுவன கடன் சம்பந்தமான வழக்கு நிலையில் உள்ளது.

ரூ 30 லட்சம் பொருட்கள்
தான் ஊரில் இல்லாததை தெரிந்து கொண்டு இந்துஜா பைனான்ஸ்மண்டல மேலாளர் உமா சங்கர் மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்ட 10 பேர் வீட்டை விற்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வீட்டிலிருந்த ரூ. 30 லட்சம் பொருட்களை மீட்டு தர வேண்டும் என மதுவந்தி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications