தமிழக தொழிலாளர்கள் வயிற்றில் அடித்ததாக புகார்- நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் ஜெயில்!
சென்னை: அரசு தொழிலாளர் காப்பீட்டு கழகம் தொடர்ந்த வழக்கில் நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ஜெயப்பிரதா மீது அரசு தொழிலாளர் காப்பீட்டு கழகம் வழக்கு ஒன்று தொடர்ந்தது. தாம் நடத்திய திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. பணத்தை அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தவில்லை என்பது வழக்கு. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

முன்னணி நடிகை: ஆந்திராவை சேர்ந்த நடிகை ஜெயப்பிரதா இந்திய திரை உலகின் முன்னணி நடிகை. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பின்னர் இந்தி திரை உலகிலும் கொடி கட்டிப் பறந்தார். 1994-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருபவர். தெலுங்குதேசம் கட்சி தொடங்கி உ.பியின் சமாஜ்வாதி கட்சி வரை நீடித்தது ஜெயப்பிரதாவின் அரசியல் பயணம். 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலி. உ.பி. ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யுமானார். 2009 லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார் நடிகை ஜெயப்பிரதா.
வழக்கு என்ன?: சென்னையில் புகழ்பெற்ற ஜெயபிரதா உள்ளிட்ட 2 தியேட்டர்களை நடத்தி வந்தார் நடிகை ஜெயப்பிரதா. இந்த தியேட்டர்களுக்கு சொத்துவரி செலுத்தவில்லை என்பதால் ஏற்கனவே தியேட்டர் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்ட நிகழ்வும் உண்டு. இதே பாணியில் தியேட்டர் ஊழிய்ர்களிடம் இஎஸ்ஐ செலுத்துவதற்கான பணத்தைப் பிடித்தம் செய்திருக்கிறது ஜெயப்பிரதாவின் தியேட்டர் நிர்வாகம், ஆனால் முறையாக இப்பணத்தை அரசு தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் செலுத்தவில்லை. இதனால் ஜெயப்பிரதா மீது அரசு தொழிலாளர் காப்பீட்டு கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் தற்போது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications