ஜனநாயகன் படத்தை இணையதளம், கேபிள் டிவியில் வெளியிட இடைக்கால தடை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தை இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் சட்டவிரோதமாக வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை ஜூன் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகரும், தவெக தலைவருமான விஜய், தனது கடைசிப்படம் என அறிவித்த 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், ராணுவம் மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பான காட்சிகள் காரணமாக அப்படத்துக்குத் தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

jana nayagan

இதனால் அப்படம் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக படத்துக்கு சான்று வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, படத்துக்கு உடனடியாக சான்று வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய பட தயாரிப்பு தரப்பு, தனி நீதிபதி முன் நிலுவையில் இருந்த வழக்கை திரும்பப் பெற்றது. சென்சார் போர்டின் மறு ஆய்வு குழு ஆய்வில் படம் இருந்தது. படத்தை பார்த்த மறு ஆய்வுக் குழுவினர் இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை.

இந்நிலையில் 'ஜனநாயகன்' படம் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானதால் படத் தயாரிப்பு குழு அதிர்ச்சியடைந்துள்ளது. கோவையில் இப்படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.'ஜனநாயகன்' படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரோடக் ஷன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்யப்பட்டது.

அந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி மனு தாக்கல் செய்யப்பட்டது. திரைப்பட சான்றிதழ் வாரியம் இன்னமும் சான்றிதழ் வழங்கவில்லை என்றும் ஆனால் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களிலோ கேபிள் டிவிகளிலோ வெளியிட்டால் அது பட தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஜனநாயகன் படத்தை இணையதளங்களிலும் கேபிள் டிவிகளிலும் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 2 ஆம் தேதி ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+