ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: இன்ஸ்பெக்டர் புஹாரி ஜாமீன் மனு தள்ளுபடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே வைத்து அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

Armstrong

இது தொடர்பாக செம்பியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 27 பேரை கைது செய்தனர். பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் என்பவரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில், ஏற்கெனவே ஜாமீன் கோரி முகமது புஹாரி இரண்டு முறை தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் முகமது புஹாரி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, முகமது புஹாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+